தமிழ் சினிமாவில், மாஸ்டர் ராகவா லாரன்ஸ் என்றால் நடனக் கலைஞர், நடிகர், தயாரிப்பாளர் என்ற நிலைகளை கடந்து அவர் மிகச்சிறந்த கருணையாளர். வறுமையில் இருப்பவர்களுக்கு, துன்பத்தில் தவிப்பவர்களுக்கு, ஏழைகளுக்கு, மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று உதவும் குணம் மி்ககவர்.
அவரது நல்ல குணத்தை பார்த்து, பலரும் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கல் நிதியுதவி அளிக்க முன்வருகின்றனர். ஆனால், நீங்கள் நிதியுதவி செய்ய வேண்டாம். நானே நிறைய சம்பாதிக்கிறேன். அந்த பணத்திலேயே மற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறேன் என கேட்டுக்கொண்ட மிகப்பெரிய மனசுக்காரர் அவர்.
அதாவது மற்ற தரும் நிதியில் மற்றவர்களுக்கு உதவ துவங்கினால், நாளடைவில் நாம் சம்பாதித்த பணத்தை பத்திரப்படுத்திக் கொள்ளும் மனநிலை வந்துவிடுமோ, அப்படி வந்தால் உதவும் குணம் தன்னிடம் இருந்து மறைந்து போய்விடுமே என்ற உளவியல் அச்சம்தான் இதற்கு காரணமாக இருக்கிறது.
சமீபத்தில் கூட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் பிரமோசன் நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், என்னை பார்க்க ரசிகர்கள் யாரும் நேரில் வர வேண்டாம். உங்கள் ஊரில் உள்ள திருமண மண்டபத்தை வாடகைக்கு பிடியுங்கள். நானே அங்கு வந்து உங்களை நேரில் சந்திக்கிறேன். புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். எனக்காக, நீங்கள் சென்னைக்கு பணம் செலவழித்து வந்து என்னை பார்க்க வேண்டாம் என்றும் அன்பு கட்டளையிட்டார்.
இப்படிப்பட்ட நல்ல மனிதனராக மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சை முதன் முதலாக அற்புதம் என்ற படத்தில், கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர் டைரக்டர் அற்புதன். அவர் நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தார். ராகவா லாரன்சை கதாநாயகன் ஆக்கிய பெருமைக்குரிய அவர், நேற்று இறந்து விட்டார்.
தன்னை திரையில் நாயகனாக்கி அழகு பார்த்த முதல் இயக்குநர் அற்புதன் என்ற வகையில், லாரன்ஸ் அவரை மறந்திருக்க வாய்ப்பே இல்லை. இயக்குநர் அற்புதன், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒரு சாதாரண மனிதர். அவரது இழப்புக்கு பின், அந்த குடும்பம் வறுமையில் தவிக்கும் நிலையில் வாழ்கிறது. எனவே, ராகவா லாரன்ஸ் தன்னை நாயகனாக்கிய இயக்குநரை இழந்து வாடும் அந்த குடும்பத்துக்கு நிச்சயம் உதவி செய்வார் என்ற நம்பிக்கை, எதிர்பார்ப்பு தமிழ் சினிமாத்துறையினரிடையே ஏற்பட்டுள்ளது.





