தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காமெடி கிங் ஆக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. அதுவும் சுந்தா் சி இயக்கிய படங்களிலும் சுந்தர் சியுடன் இணைந்து நடித்த படங்களிலும் வடிவேலு காமெடி வேற லெவலில் இருந்தது. வடிவேலுவை காமெடியில் பெரிய உயரத்துக்கு கொண்டு வந்த இயக்குனர்களில் சுந்தர் சி மிக முக்கியமானவர்.
பல படங்களில் நடிகர் வடிவேலு காமெடி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. வி சேகர் ஆர்வி உதயகுமார் கேஎஸ் ரவிக்குமார் போன்றவர்களது படங்களில் வடிவேலு நடிப்பு திரைக்கதையுடன் இல்லாமல் தனி டிராக்காக இருந்துள்ளது. சில படங்களில் திரைக்கதையோடு வடிவேலு நடிப்பும் கலந்து வந்திருக்கிறது.
குறிப்பாக வின்னர் படத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள தலைநகரம் படத்தில் நாய் சேகர் லண்டன் படத்தில் வக்கீல் வெடிமுத்து கிரி படத்தில் பேக்கரி ஓனர் வீரபாகு ரெண்டு படத்தில் மேஜிக் ஷோ கிரிகாலன் என வடிவேலு ஏற்று நடித்த ஒவ்வொரு கேரக்டரும் அவருக்கு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது.
இந்நிலையில் 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள படம் கேங்கர்ஸ். இந்த படம் வெளியாகி 2 நாட்களான நிலையில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால் படம் பார்த்த ஒரு தரப்பினர் சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் அந்தளவுக்கு படத்தில் காமெடி இல்லை என்றும் விமர்சிக்கின்றனர்.
வழக்கமான சுந்தர் சி படங்களில் இதுவும் ஒன்று. வழக்கமான அவரது படங்களில் கிளாமர் தூக்கலாக இருக்கும். இந்த படத்தில் அது மிஸ்சிங். படத்தின் முதல் பாதியை விட 2ம் பாதி நன்றாக உள்ளது.வடிவேலு காமெடி பழைய படங்கள் அளவுக்கு இல்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக கலவையான விமர்சனங்கள் கேங்கர்ஸ் படத்துக்கு இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, கேங்கர்ஸ் படம் பார்த்தேன். ஒரே சிரிப்பு சரவெடிதான். வடிவேலு மேஜிக்கால் மொத்த படத்தையும் தன் வசப்படுத்தி விட்டார். சுந்தர் சி அண்ணாவுக்கும் படக்குழுவுக்கும் என் வாழ்த்துகள் என்று அந்த பதிவில் நடிகர் சிம்பு கேங்கர்ஸ் படத்தை பாராட்டி உள்ளார். இந்த பதிவு இப்போது வைரலாகி வருகிறது.





