- Advertisement -
Homeபொழுதுபோக்குதொடர்ந்து அடி மேல் அடி விழுவதால் இப்போதைக்கு அது வேண்டவே வேண்டாம் - முக்கிய முடிவெடுத்த...

தொடர்ந்து அடி மேல் அடி விழுவதால் இப்போதைக்கு அது வேண்டவே வேண்டாம் – முக்கிய முடிவெடுத்த நடிகர் விஷால்!

- Advertisement -

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை அவரே தயாரித்தும் இருக்கிறார். தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

செல்லமே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் விஷால் தொடர்ந்து திமிரு சண்டக்கோழி சிவப்பதிகாரம் தாமிரபரணி போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகராக மாறினார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை விஷாலுக்கு பெற்றுத் தந்தது.

ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் விஷாலுக்கு கடந்த பல ஆண்டுகளாக அவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றுத் தரவில்லை. குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம் தவிர மற்ற படங்கள் ஹிட் ஆகவில்லை. சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன் நடித்த மதகஜ ராஜா படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

மதகஜ ராஜா படத்தின் மிகப் பெரிய வெற்றிக்கு வரலட்சுமி சரத்குமார் அஞ்சலி ஆகியோரின் தாராள கவர்ச்சியும், சந்தானத்தின் காமெடியும்தான் முக்கிய காரணம் என்று படம் பார்த்த அனைவருக்கும் தெரியும். அதே போல் மார்க் ஆண்டனி படத்தில் நடிப்பு அரக்கனாக வந்து படத்தை தூக்கி நிறுத்தியது எஸ்ஜே சூர்யா தான் என்பதும் ரசிகர்களால் மறுக்க முடியாத உண்மை.

இந்த சூழலில் மதகஜ ராஜாவின் அபார வெற்றிக்கு பிறகு சுந்தர் சி விஷால் கூட்டணியில் புதிய படம் உருவாக ஏற்பாடு நடந்தது. ஆனால் மிக அதிகமான சம்பளம் கேட்டு அந்த திட்டத்தை ரத்து செய்ய வைத்தவர் நடிகர் விஷால்தான். கடந்த 2 ஆண்டுகளாக தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் துப்பறிவாளன் 2 படத்தை எடுக்க விஷால் பலவித முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.

துப்பறிவாளன் 2 படத்தை நடிகர் விஷாலே இயக்கி நடிக்க முயற்சித்த நிலையில் அந்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அவரே சொந்தமாக தயாரித்து எடுக்கப்பட்ட காட்சிகளை தூரப் போட்டுவிட்டு மீண்டும் ரி சூட் நடத்த அவர் போட்ட பட்ஜெட்டும் கைக்குள் அடங்கவில்லை. அதனால் துப்பறிவாளன் 2 படம் இயக்கம் நடிப்பு எதுவுமே இப்போதைக்கு வேண்டாம் என்று முடிவு செய்து அந்த திட்டத்தையே கிடப்பில் போட்டுவிட்டார் நடிகர் விஷால் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்