- Advertisement -
Homeபொழுதுபோக்குசிரஞ்சீவியுடன் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா, ஹீரோக்கள் சம்பளத்தில் 20 சதவீதம்...

சிரஞ்சீவியுடன் நடிக்க ரூ. 18 கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா, ஹீரோக்கள் சம்பளத்தில் 20 சதவீதம் தரக்கூடாதா? – ஆதரவுக் கரம் நீட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போதைய சூழலில் முன்னணி சீனியர் நடிகைகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா இருவர் மட்டும்தான். கடந்த 1990களில் முன்னணி நாயகிகளாக வலம் வந்த குஷ்பு மீனா ரம்பா சிம்ரன் ரம்யா கிருஷ்ணன் சினேகா ரோஜா போன்றவர்கள் எல்லாம் இப்போது அம்மா அக்கா அத்தை கேரக்டர்களில் நடிக்கும் நடுத்தர வயது பெண்மணிகளாக மாறிவிட்டனர்.

ஆனால் கடந்த 2005ம் ஆண்டுகளில் முன்னணி நாயகிகளாக மாறி 20 ஆண்டுகள் கடந்தும் இன்னும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நாயகியாக நடித்து வரும் ஒரு இமேஜில் நடிகைகள் நயன்தாரா மற்றும் திரிஷா இருந்து வருகின்றனர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

நடிகை நயன்தாரா ரஜினி விஜய் அஜீத்குமார் சூர்யா போன்ற தமிழ் ஹீரோக்களை போலவே தெலுங்கில் பாலய்யா சிரஞ்சீவி போன்றவர்களுடன் சில படங்களில் ஏற்கனவே நடித்திருக்கிறார். அதே போல் நடிகை திரிஷாவும் சமீபத்தில் சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா என்ற படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். அந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

இந்த சூழலில் இயக்குனர் அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்தில் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேசியுள்ளார். படத்தின் கதையை கேட்ட பிறகு ஓகே சொன்ன நடிகை நயன்தாரா இந்த படத்தில் நடிக்க சம்பளமாக ரூ. 18 கோடி கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் தலைதெறிக்க ஓடிவிட்டதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆனால் சிரஞ்சீவி போன்ற பெரிய நட்சத்திர நடிகர்கள் ஒரு படத்தில் நடிக்க ரூ. 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நிலையில், அதில் 5ல் ஒரு பங்காக 20 சதவீதம் சம்பளம் நாயகிக்கு தரக்கூடாதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒரு படத்தின் நாயகியும் அவரது கதாபாத்திரமும் படத்துக்கு வலு சேர்க்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி கதாநாயகிகள் என்றாலே தெலுங்கு படங்களில் கட்டாயம் கவர்ச்சி காட்டியும் நடிக்க வேண்டும். தன்னைவிட வயதில் பலமடங்கு மூத்த ஹீரோவுடன் நடிகைகள் நடிக்கும் நிலையில் சம்பளத்தை உயர்த்தி கேட்பதில் தவறு இல்லை. சரிக்கு சரியான சம்பளம் கேட்காமல் ஹீரோ சம்பளத்தில் 5ல் ஒரு பாகம் கேட்டால் கூட அதை தர மறுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் படங்களில்தான் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால் உண்மையில் சம்பள விஷயத்தில் ஆணாதிக்கமே உள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சற்று முன்