- Advertisement -
Homeபொழுதுபோக்குபராசக்தி திரைப்படத்திலிருந்து வெளிவந்த பக்கா அப்டேட்... சுதா கொங்கராவின் சூப்பர் மூவ்...

பராசக்தி திரைப்படத்திலிருந்து வெளிவந்த பக்கா அப்டேட்… சுதா கொங்கராவின் சூப்பர் மூவ்…

- Advertisement -

சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படமாக உருவாகி வருகிறது பராசக்தி. முதலில் இந்த திரைப்படத்தில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தது. சூரரைப் போற்று திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவுடன் சுதா கொங்கரா இணைய இருந்தார். படத்திற்கு புறநானூறு என்றும் தலைப்பு வைத்தார்கள். சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் இதனை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா நசீம், விஜய் வர்மா உள்ளிட்டோர் இடம் பெற்றிருப்பதாக தெரிவித்திருந்தார்கள். ஆனால் இந்த திரைப்படத்தின் பணிகள் அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை. அதேசமயம் இந்த திட்டம் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இப்படியான சூழலில்தான் அந்த கதை, சிவகார்த்திகேயன் வசம் சென்றது.

- Advertisement -

புறநானூறு என்னும் டைட்டிலுக்கு சூர்யாவின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து என் ஒ சி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பராசக்தி என படத்திற்கு டைட்டில் வைத்தார்கள். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த திரைப்படத்தை தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. 1960களில் நடக்கும் காலகட்டத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி வருகிறார் சுதா கொங்கரா.

இந்தி திணிப்பை மையமாக வைத்தே இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். படத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இதற்காக சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே உள்ள கட்டிடத்தில் பெரும்பாலான காட்சிகளை எடுத்தார்கள். பிறகு காரைக்குடி சிதம்பரம் மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களில் இந்த திரைப்படம் படமாக்கப்பட்டது.

- Advertisement -

இதில் தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இதுபோக அதர்வாவும் இடம்பெற்றுள்ளார். மிக முக்கியமாக ரவி மோகனுக்கு படத்தில் வில்லன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தெலுங்கு நடிகர் ராணாவும் இந்த திரைப்படத்தில் இருக்கிறாராம். இது தொடர்பாக சிவகார்த்திகேயனை அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் சூசகமாக பேசி இருந்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கான பணிகளில் சுதா வேகம் எடுத்து வருகிறார். அதன்படி தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக 20 நாட்கள் செலவிட இருக்கிறார்களாம். சென்னையில் இதற்கான சூட்டிங் பணிகள் நடைபெறும் என்று திரைத்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்