- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய பிரபல தெலுங்கு நடிகர் - என்னதான் நடக்குது இங்கே...

இசையமைப்பாளர் அனிருத்துக்கு காதல் கடிதம் எழுதிய பிரபல தெலுங்கு நடிகர் – என்னதான் நடக்குது இங்கே என்று குழம்பிப் போன இசை ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். கடந்த 2011ம் ஆண்டில் தனுஷ் ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து எதிர்நீச்சல் வணக்கம் சென்னை இரண்டாம் உலகம் வேலையில்லா பட்டதாரி மான் கராத்தே கத்தி காக்கி சட்டை மாரி என பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்த பேட்ட ஜெயிலர் கூலி கமல் நடித்த இந்தியன் 2 விக்ரம் விஜய் நடித்த மாஸ்டர் சிவகார்த்திகேயன் நடித்த டான் டாக்டர் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா அஜீத்குமார் நடித்த விவேகம் என பல மாஸ் ஹிட் படங்களுக்கு அனிருத் இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தமிழில் மட்டுமின்றி இந்தி தெலுங்கு என பிற மொழிகளிலும் அனிருத் இசையமைத்து வருகிறார். இதுதவிர வெளிநாடுகளில் அதிகளவில் இசை கச்சேரிகளில் பங்கேற்று பாடி வருகிறார். அவரது இசை கச்சேரிகளுக்கு இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆரவாரமான வரவேற்பு கிடைத்து வருகிறது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஜனநாயகன் படத்துக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்துள்ள கிங்டம் என்ற படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகிற 30ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் இருந்து பர்ஸ்ட் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது வலைதள பக்கத்தில் அனிருத்துக்கு ஒரு சிறிய காதல் கடிதம் என குறிப்பிட்டு ஒரு பதிவை செய்துள்ளார். அந்த பதிவில் நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியிருப்பதாவது, இந்த கிங்டம் படத்திற்காக ஒரு காதல் பாடலை உருவாக்கினோம். என்னுடைய 3வது படம் வெளியானதில் இருந்தே நான் அனிருத்தின் ரசிகராக இருக்கிறேன். என்னுடைய படத்துக்கு அவர் ஒருநாள் இசையமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளேன். அது 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் நிறைவேறியுள்ளது.

என்னுடைய 13வது படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அவர் இசையில் என் படத்தின் முதல் பாடல் வெளியாகி இருப்பது சந்தோஷமாக உள்ளது. எங்களது உலகத்தையும் உணர்வுகளையும் உங்களுக்கு திறந்து விடுகிறோம். மகிழ்ச்சி மற்றும் நினைவுகளையும் சேர்க்கும் என்று நம்புகிறேன் என்று விஜய் தேவரகொண்டா அந்த பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு அவர் ஒரு சிறிய காதல் கடிதம் என்று குறிப்பிட்டிருப்பது இசை ரசிகர்களை குழப்பம் அடையச் செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்