- Advertisement -
Homeபொழுதுபோக்குவரலாற்று நாவல் வேள்பாரி படத்துக்கு ஆப்பு வைத்த இந்தியன் 2; ரூ. 1000 கோடி...

வரலாற்று நாவல் வேள்பாரி படத்துக்கு ஆப்பு வைத்த இந்தியன் 2; ரூ. 1000 கோடி பட்ஜெட்டில் வேள்பாரி சாத்தியமா? – ஹீரோ விஷயத்தில் பின்வாங்குகிறாரா டைரக்டர்?

- Advertisement -

பொதுவாக ஒரு கதையை இயக்குனர் உருவாக்கி, அதற்கு திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதி டைரக்‌ஷன் செய்வது என்பது இயக்குனர்களுக்கு எளிதாக இருக்கிறது. ஏனெனில் ஒரு சிறுகதை போன்ற கதையை கூட திரைப்படமாக மாற்றிவிட முடியும், அழகர் சாமியின் குதிரை அப்படிப்பட்ட ஒரு சிறுகதையில் இருந்து உருவானதுதான்.

அதே நேரத்தில் மிகப்பெரிய நாவல்களை, கதைகளை படமாக்க இயக்குனர்கள் முயற்சிக்கும் போது அதில் பல விஷயங்களில் கவனித்து, இயக்க வேண்டும். உதாரணமாக பொன்னியின் செல்வன் நாவல் 5 தொகுதிகளை கொண்டது. அதை 2 பாகங்களாக தருவதில், இயக்குனர் மணிரத்னம் தோல்வியடைந்து விட்டார் என்பதே உண்மை. ஏனெனில் நாவலில் வந்த பல விஷயங்கள் படத்தில் ஆழமாக இல்லை. அதிலும் நாவலின் முடிவும், படத்தின் முடிவும் வெவ்வேறாக இருந்தது.

- Advertisement -

வாசகர்களால் விரும்பி வாசிக்கப்பட்ட ஒரு நாவலை, புதினத்தை படமாக மாற்றும்போது அதில் உள்ள ஜீவன் குறையாமல், உடையாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். நாவலில் வரும் கதாபாத்திரங்களை காட்சிப்படுத்துவது என்பது சாதாரண விஷயமில்லை. ஏனெனில் கதை வாசிக்கும்போது வாசகர் மனதில் தோன்றும் எண்ணங்களே கதையாக உருமாறும். அதை இயக்குனர் ஒருவர் படமாக்கி காட்சிப்படுத்தும்போது அது வாசகர்களாகிய ரசிகர்களை திருப்திபடுத்துவது மிகவும் சிக்கலானது.

மதுரை எம்பி சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் வாசகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நாவல், விருதுகளை வென்ற படைப்பு. இந்த நாவலை வேள்பாரி என்னும் திரைப்படமாக 2 பாகங்களாக உருவாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார். அதற்காக 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கவும் தயாரிப்பாளர் சம்மதித்துள்ளார்.

- Advertisement -

ஆனால் இப்படி ஒரு பிரமாண்ட படைப்பில் தமிழில் நடிக்க ஹீரோக்கள் இல்லை. அஜீத்குமார் பெயர் அடிபட்டாலும் அது இன்னும் உறுதியாகவில்லை. ரன்வீர் சிங், யாஷ் போன்றவர்களுடன் பேசிய நிலையில், அவர்களும் ஷங்கருக்கு ஓகே சொல்லவில்லை. இப்படி ஒரு பிரமாண்ட படைப்பில் பிரபாஸ் போன்ற கம்பீரமான ஹீரோக்கள் நடித்தால்தான் எடுபடும். ஆனால் மீண்டும் பிரபாஸ் நடித்தால், பாகுபலி சாயல் வேள்பாரிக்கு வந்துவிடும்.

இப்போது வேள்பாரி படத்துக்கு மேலும் ஒரு புதிய சிக்கல் வந்திருக்கிறது. அதாவது, இந்த படத்தில் நடிக்க சரியான ஹீரோ கிடைக்காமல் இயக்குனர் ஷங்கர் தடுமாறி வருகிறார். இப்போது இந்தியன் 2 படம் விமர்சனத்தால், ஷங்கர் மீதான இமேஜ் டேமேஜ் ஆகியிருக்கிறது. அதனால் ஷங்கரை நம்பி 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வேள்பாரி படத்தை தயாரிக்க, தயாரிப்பாளர் முன்வருவாரா, என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது. அதனால் ஷங்கர இயக்கத்தில் வேள்பாரி படம் குறித்த குழப்பமே கோலிவுட்டில் நிலவுகிறது.

- Advertisement -

சற்று முன்