நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ரெட்ரோ. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்திருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். ஜெயராம் நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த படம் டிஜிட்டல் ரைட்ஸ் ரூ. 65 கோடிக்கு விற்றுள்ளது.
இதற்கிடையே நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் அவரது 45வது படம் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் இன்னும் விற்பனை ஆகவில்லை. அதனால் இந்த படத்தை 2026ம் ஆண்டில் வெளியிடலாம் என்ற முடிவில் படக்குழுவினர் இருந்து வருகிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் தெலுங்கு பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க உள்ள அவரது 46 படம் டிஜிட்டல் ரைட்ஸ் விற்பனை அமோகமாக நடந்துள்ளது. அந்த படத்தை ரூ. 85 கோடி விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது. ஏனென்றால் அது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிற படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டில் துல்கர் சல்மான் மீனாட்சி சவுத்ரி ராம்கி உள்ளிட்டோர் நடித்த படம் லக்கி பாஸ்கர். இந்த படத்தை இயக்கியவர் வெங்கி அட்லூரிதான். இந்த படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்த முக்கிய படமாகும். அந்த அடிப்படையில் டைரக்டர் வெங்கி அட்லூரி மாஸ் ஹிட் தந்தவர் என்ற அடிப்படையில் சூர்யா நடிக்கும் 46வது படத்தை மிக அதிக விலை கொடுத்து நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வாங்கியுள்ளது.
ஆனால் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் வெளியான கங்குவா படமும் தோல்வி, தற்போது வெளியான ரெட்ரோ படமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 45வது படத்தை வாங்க எந்த ஓடிடி நிறுவனமும் முன்வர மறுக்கிறது. அதனால் அந்த படத்தின் வெளியீடு அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தின் ஓடிடி வியாபாரம் ரூ. 85 கோடிக்கு போயிருப்பதால், நடிகர் சூர்யா தனது சம்பளத்தை ரூ. 60 கோடியாக உயர்த்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வாடிவாசல் படத்தில் நடிக்க 2019ம் ஆண்டில் சூர்யா கமிட் ஆன போது அவரது சம்பளம் ரூ. 30 கோடிதான். இப்போது ரூ. 60 கோடியாக சம்பளத்தை உயர்த்தி சூர்யா கேட்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கங்குவா, ரெட்ரோ படங்களின் படு தோல்விக்கு பிறகும் யாராவது சம்பளம் உயர்த்தி தருவார்களா, என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.





