- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமல் சிங்கம்புலி காமெடி காம்போவில் உருவான தேசிங்கு ராஜா 2 - ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக...

விமல் சிங்கம்புலி காமெடி காம்போவில் உருவான தேசிங்கு ராஜா 2 – ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் எஸ் எழில். குறிப்பாக விஜய் சிம்ரன் நடித்த துள்ளாத மனமும் துள்ளும், அஜீத்குமார் ஜோதிகா நடித்த பூவெல்லாம் உன் வாசம் மற்றும் ராஜா, சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர்.

இவரது படங்களில் பாடல்கள், காமெடி பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து விடும். மேலும் பிரபுதேவா சரத்குமார் இணைந்து நடித்த பெண்ணின் மனதை தொட்டு, ஜெயம் ரவி பாவனா நடித்த தீபாவளி, விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற பல வெற்றி படங்களை ரசிகர்களுக்கு தந்தவர்.

கடந்த 2013ம் ஆண்டில் நடிகர் விமல் பிந்து மாதவி நடிப்பில் தேசிங்குராஜா என்ற படத்தை இயக்குனர் எஸ் எழில் இயக்கினார். இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தேசிங்குராஜா படத்தில் காமெடி காட்சிகள் ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தன.

தற்போது தேசிங்குராஜா படத்தின் 2ம் பாகத்தை இயக்குனர் எஸ் எழில் டைரக்ட் செய்து இருக்கிறார். இதில் நடிகர் விமல் பூஜிதா ஹர்ஷிதா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் ரவி மரியா ரோபோ சங்கர் சிங்கம்புலி கிங்ஸ்லி புகழ் மொட்டை ராஜேந்திரன் சாம்ஸ் வையாபுரி லொள்ளு சபா சாமிநாதன் மதுரை முத்து மதுமிதா உள்ளிட்ட பலர் காமெடி ரோலில் நடித்து இருக்கின்றனர்.

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் 4 நண்பர்கள் வேறு வேறு பாதையில் செல்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படி மாறி இருந்தது, இவர்கள் எந்த சூழ்நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்பதை காமெடி கதைக்களத்தில் உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ் எழில். காமெடி கேரக்டர்கள் படத்தில் நிறைய வருவதால் படத்தில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

இயக்குனர் எஸ் எழில் இயக்கிய படங்களில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட் ஆகும். அஜீத் குமார் நடித்த பூவெல்லாம் உன்வாசம் படத்திற்கு பிறகு தற்போது தேசிங்குராஜா 2 படத்தில் இசையமைப்பாளர் வித்யாசாகருடன் மீண்டும் இயக்குனர் எழில் இணைந்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூலை 11ம் தேதி ரிலீஸ் ஆகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் விமலுடன் காமெடி நடிகர்கள் இணைந்து கலக்கும் இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களுக்கு குஷிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சற்று முன்