- Advertisement -
Homeபொழுதுபோக்குபாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கானுடன் நடிக்க மறுத்த நயன்தாரா, அதுவும் அந்த சூப்பர் ஹிட் படத்திலா?...

பாலிவுட் நட்சத்திர நடிகர் ஷாருக்கானுடன் நடிக்க மறுத்த நயன்தாரா, அதுவும் அந்த சூப்பர் ஹிட் படத்திலா? – என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். குறிப்பாக கதாநாயகியை மையப்படுத்திய கதைகளை கொண்ட படங்களில் நடிக்க நயன்தாரா அதிக ஆர்வம் காட்டுகிறார். ஆனால் சமீபகாலமாக அவரது படங்கள் எதுவும் பெரிய வரவேற்பை பெறவில்லை.

குறிப்பாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படம் டெஸ்ட். நடிகை நயன்தாரா மாதவன் சித்தார்த் மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்த டெஸ்ட் படம் பலத்த தோல்வியை சந்தித்தது. இந்த படத்தை விலைக்கு வாங்கிய வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்துக்கு ரூ. 50 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

நடிகை நயன்தாரா இப்போது சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நயன்தாரா அம்மனாக நடித்து வருகிறார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்தான் வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளுக்கு சமீபத்தில் நடந்த திருமண விழாவில் நடிகை நயன்தாரா பங்கேற்கவில்லை. திருமண அழைப்பிதழை தனது வீட்டுக்கு நேரில் வந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தரவில்லை என்பதால் அவர் இந்த விழாவை புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது.

இந்தியில் நட்சத்திர நடிகர் ஷாருக்கான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான படம் சென்னை எக்ஸ்பிரஸ். இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய இந்த படத்தில் நாயகியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். ஆனால் முதலில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க படக்குழு திட்டமிட்டது நடிகை நயன்தாராவை தான். ஏனெனில் அப்போது தமிழில் பிரபல நாயகியாக நயன்தாரா வளர்ந்திருந்தார்.

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் கதையின்படி பெரும்பாலான காட்சிகள் தென்னிந்தியாவில் நடக்கும்படி இருந்ததால் இந்த படத்தில் நடிகை நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணி, இந்த படத்தில் அவரை நாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா மறுத்து விட்டார்.

தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தில் இருந்ததால் பாலிவுட்டில் நடிக்க அவர் அப்போது விரும்பாமல் தவிர்த்திருக்கிறார். மேலும் தமிழில் சில படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்ததால் கால்ஷீட் பிரச்னையும் இருந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்தார். ஆனால் படம் பெரிய வெற்றி பெற்றும் நயன்தாராவுக்கு இந்தியில் எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை. அடுத்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்