- Advertisement -
Homeபொழுதுபோக்குசார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தேதி குறிச்சாச்சா... இந்த நாளில்தான் சூட்டிங் நடக்கப் போகிறதாம்......

சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தேதி குறிச்சாச்சா… இந்த நாளில்தான் சூட்டிங் நடக்கப் போகிறதாம்… முதல்முறையாக அப்டேட் கொடுத்த ஆர்யா…

- Advertisement -

அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். தனது முதல் திரைப்படத்திலேயே தலித் மக்களின் வாழ்க்கை முறையையும், ஒரு இளைஞரின் காதல் கதையையும் மிக அழகாக கூறியிருந்தார் ரஞ்சித். இங்கிருந்து தொடங்கிய அவரது பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

முக்கியமாக அவரது இயக்கத்தில் வெளிவந்த மெட்ராஸ், காலா உள்ளிட்ட திரைப்படங்கள் கவனம் ஈத்தன. அவரது இயக்கத்தில் பலரது பாராட்டையும் பெற்ற திரைப்படமாக அமைந்தது சார்பட்டா பரம்பரை. 1970 காலகட்டங்களில் குத்துச்சண்டையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது.

யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டது இந்த திரைப்படம். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, பசுபதிக்கு மிக முக்கியமான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார் ரஞ்சித். சென்னையில் ஒரு காலத்தில் குத்துச்சண்டை மிகவும் பிரபலமாக இருந்தது. அதனை மையப்படுத்தியே இதன் கதையை எழுதியிருந்தார் பா ரஞ்சித்.

துஷாரா விஜயன் இந்த திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசி காட்சி வரை சலிப்பே தட்டாத வகையில் திரைக்கதையை கச்சிதமாக ரஞ்சித் அமைத்திருந்ததால் இந்த திரைப்படம் பலரது மத்தியிலும் பேசப்பட்டது. அது மட்டுமல்ல ஆர்யாவுக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

இப்படியான சூழலில் தான் யாருமே எதிர்பார்க்காத நேரத்தில், சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று கூறியிருந்தார் பா ரஞ்சித். ஆனால் இதற்கான பணிகள் மட்டும் நடந்த மாதிரியே தெரியவில்லை. ரஞ்சித்தும் தனது வேட்டுவம் திரைப்படத்தில் தற்போது கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

இதில் அட்டகத்தி தினேஷ், ஆர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பகத் பாசிலும் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சூழலில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்யாவிடம், சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் கூறிய அவர், ஆகஸ்ட் மாதம் அதற்கான சூட்டிங் தொடங்கும் என்று தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

சற்று முன்