- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படம், இலங்கைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் -...

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவான மதராஸி படம், இலங்கைக்கு சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் – முக்கிய அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

அமரன் படத்துக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தனது 25வது படம் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களுக்கு முன் இலங்கையில் தொடர்ந்து நடந்தது. 2 மாதங்களுக்கு மேல் அங்கு முகாமிட்ட இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிற நடிகர் நடிகைகள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன.

பராசக்தி படம் 1960 முதல் 1965ம் ஆண்டில் நடந்த சம்பவங்களை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவாகிறது. அதனால் இலங்கையில் 1860 ஆண்டில் உள்ளது போன்ற லைவ் லொக்கேஷன் இடங்கள் நிறைய இருந்ததால் அந்த பகுதிகளில் ஷூட்டிங் நடத்தப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த காலத்தில் இருந்த நீராவி என்ஜின் ரயில் இலங்கையில் இருப்பது மட்டுமே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பராசக்தி படப்பிடிப்புக்கு பின் கடந்த ஒரு மாதமாக நடிகர் சிவகார்த்திகேயன் ஓய்வில் இருந்த நிலையில் இப்போது மதராஸி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள தயாராகி விட்டார். அமரன் படப்பிடிப்பு நடந்த போதே மதராஸி படத்தின் படப்பிடிப்பும் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்தியில் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் படத்தை இயக்க ஏஆர் முருகதாஸ் சென்றுவிட்டதால், மதராஸி படப்பிடிப்பு அப்படியே பாதியில் நின்றுவிட்டது. அந்த நேரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படப்பிடிப்பு இருந்ததால் அந்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார். இப்போது அமரன், சிக்கந்தர் படங்கள் இரண்டுமே வெளியான நிலையில் மதராஸி படத்தில் ஏஆர் முருகதாஸ் கவனம் செலுத்தி வருகிறார்.

இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் இலங்கையில் எடுக்கப்படுகின்றன. இதற்காக தான் நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அங்கு 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அங்குதான் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகின்றன.

ஏற்கனவே பராசக்தி படப்பிடிப்புக்காக 2 மாதங்கள் வரை சிவகார்த்திகேயன் இலங்கையில் இருந்தார். அங்குள்ள செழுமையான வளமையான அழகான இடங்களை பார்த்து சிவகார்த்திகேயன் மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். மிீண்டும் இலங்கையில் படப்பிடிப்பு என்றதும் மதராஸி படத்தில் நடிப்பதற்காக உற்சாகமாக சிவகார்த்திகேயன் இலங்கை சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

சற்று முன்