- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியுடன் யார் ஜோடியாக நடித்தாலும் எனக்கு பொறாமை தான் - வெளிப்படையாக பேசிய பிரபல அம்மா...

ரஜினியுடன் யார் ஜோடியாக நடித்தாலும் எனக்கு பொறாமை தான் – வெளிப்படையாக பேசிய பிரபல அம்மா நடிகை!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக முதல் கட்டமாக ரஜினிகாந்த் 15 நாட்கள் கால்ஷீட் தந்திருக்கிறார். பொதுவாக ரஜினி படங்களில் நடிப்பதே பல நடிகர்கள், நடிகைகளுக்கு வாழ்க்கையில் ஒரு லட்சியமாக இருக்கும்.

அதே நேரத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், எந்த வயது நடிகையாக இருந்தாலும் உடனே சம்மதம் கூறி விடுவர். அந்த வகையில் அம்மா நடிகையாக வலம் வரும் நடிகை சரண்யா பொன்வண்ணன், ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மிகவும் விரும்பி இருக்கிறார்.

ஆனால் சரண்யா முதலில் நாயகியாக அறிமுகமானது நடிகர் கமலுக்கு நாயகன் படத்தில் ஜோடியாக நடித்துதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் நாயகியாக பல படங்களில் நடித்த இவர், கடந்த 15 ஆண்டுகளாக அஜீத்குமார் தனுஷ் சூர்யா ஜீவா விஷால் என தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியதாவது, ரஜினிகாந்துக்கு யார் ஜோடியாக நடித்தாலும் எனக்கு பார்க்க பொறாமையாக இருக்கும். பாவி பாவி நீ நடிக்கறியா? நான் எப்ப நடிக்கிறது அப்படீன்னு மனசுக்குள்ள போயிட்டே இருக்கும்.

ஈஸ்வரி ராவ் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததை பார்த்த போது பொறாமையாக இருந்தது. அதெப்படி அவங்க நடிக்கலாம். நான்தானே நடிக்கணும் என்று தோணும். பொறாமை தான். அவரோட யார் நடிச்சாலும் எனக்கு பொறாமைதான்.

ஆனா இப்போ இருக்கிற ஹீரோயின்ஸ் ரஜினிக்கு ஜோடியா நடிச்சா பொறாமைப்பட மாட்டேன். என்னை மாதிரி லெவல்ல, என் வயசுல இருக்கிறவங்க அவருக்கு ஜோடியா நடிச்சா எனக்கு ரொம்ப கோபமாக வருகிறது என்று அந்த நேர்காணலில் நடிகை சரண்யா பொன்வண்ணன் கூறியிருக்கிறார். இவர் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்