தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கத்தக்க ஒரு நல்ல படைப்பாளியாக தன்னை வெளிப்படுத்தியவர் இயக்குனர் தங்கர்பச்சான். ஒளிப்பதிவாளரான இவருக்கு ஒளி ஓவியர் என்ற சிறப்பு பெயரும் உண்டு. ஹீரோக்களை நம்பி படம் எடுக்கும் கமர்ஷியல் இயக்குனர்களுக்கு மத்தியில் நல்ல படைப்புகளை ரசிகர்களுக்கு தர விரும்பும் இயக்குனர்களில் தங்கர் பச்சானும் ஒருவர்.
இயக்குனர் தங்கர் பச்சான் அழகி பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை கருமேகங்கள் கலைகின்றன 9 ரூபாய் நோட்டு அம்மாவின் கைபேசிே போன்ற பல படங்களை இயக்கி உள்ளார். இதில் சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி பள்ளிக்கூடம் போன்ற சில படங்களில் தங்கர்பச்சான் நடிகராகவும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
இதில் இயக்குனர் தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான், தங்கர் பச்சான் இயக்கிய அழகி படத்தில் சிறுவன் கேரக்டரில் நடித்திருந்தார். பார்த்திபன் தேவயானி நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படத்தில் சிறுவனாக, நந்திதாஸூக்கு மகனாக விஜித் பச்சான் நடித்திருந்த நிலையில், இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அடையாளம் பெற்றிருக்கிறார்.
இயக்குனர் தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடித்த படம் பேரன்பும் பெருங்கோபமும். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். இந்த படத்தில் மைம்கோபி அருள்தாஸ் லோகு சுபத்ரா தீபா சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
சிவபிரகாஷ் என்ற புதுமுக இயக்குனர் இந்த படத்தை டைரக்ட் செய்து இருக்கிறார். பேரன்பும் பெருங்கோபமும் படம் குறித்து இயக்குனர் சிவபிரகாஷ் கூறியதாவது, நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இந்த படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான் என்பதை சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இந்த படம் சொல்கிறது என்று கூறியிருக்கிறார்.
இந்த படத்தை ரியோட்டா மீடியா என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. தற்போது பேரன்பும் பெருங்கோபமும் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற ஜூன் 5ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. தங்கர்பச்சானை போல அவரது மகனும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பாரா என பார்ப்போம்.





