- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் சேதுபதி நடித்திருக்கும் ஏஸ் திரைப்படம் எப்படி இருக்கு... விமர்சனம் இதோ உள்ளே...

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ஏஸ் திரைப்படம் எப்படி இருக்கு… விமர்சனம் இதோ உள்ளே…

- Advertisement -

விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக கடந்த ஆண்டு வெளியானது மகாராஜா. குரங்கு பொம்மை என்னும் அற்புதமான திரைப்படத்தை கொடுத்த நித்திலன் சுவாமிநாதன் தான் இதனை இயக்கி இருந்தார். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம், வெற்றி மேல் வெற்றி குவித்து சாதனை படைத்தது.

அதுவும் திரையரங்குகளுக்கு பின்னர் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட போது, தமிழ் சினிமாவை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் இந்த திரைப்படம் ரீச் ஆனது. அதுமட்டுமல்லாமல் சீனாவில் இந்த திரைப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. அங்கேயும் மகாராஜாவுக்கு கிடைத்தது வெற்றிதான்.

- Advertisement -

இப்படி திரையிட்ட இடங்களில் எல்லாம் மகாராஜா வாகை சூடியதால், விஜய் சேதுபதியின் மார்க்கெட் எகிறியது. இதன் காரணமாக அவரது அடுத்த திரைப்படங்கள் மீதும் கவனம் திரும்பி இருக்கிறது. இதில் மிஷ்கினுடன் இணைந்து அவர் ட்ரெயின் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அதேபோல் பாண்டிராஜுடனும் கைகோர்த்து தலைவன் தலைவி என்னும் திரைப்படத்திலும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கிறார். அனேகமாக இந்த இரண்டு திரைப்படங்களும் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதன் நடுவே விஜய் சேதுபதியின் 51வது திரைப்படமாக ஏஸ் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் பணிகளை 2023 ஆம் ஆண்டு முடித்து விட்டனர்.

- Advertisement -

பிறகு பல்வேறு பணிகளால் முடங்கிக் கிடந்த இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் என்னும் திரைப்படத்தை இயக்கிய ஆறுமுக குமார்தான் இதனை எடுத்துள்ளார். ருக்மணி வசந்த் கதாநாயகியாக வருகிறார். யோகி பாபுவுக்கு மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுக்க முழுக்க மலேசியாவில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு செல்கிறார் விஜய் சேதுபதி. அங்கு தனது நண்பரான யோகி பாபு உடன் இருக்க, ருக்மணி வசந்த் மீது காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் அவரை ஒரு பிரச்சனையில் இருந்து காப்பாற்றுவதற்காக விஜய் சேதுபதி தலையிட அவரோ மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்கள்தான் ஏஸ் திரைப்படத்தின் கதை. படம் நன்றாக இருப்பதாக விஜய் சேதுபதி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். அதேசமயம் படம் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருந்தால் பிளாக்பஸ்டர் அடித்திருக்கும் என்றும், தற்போது சுமாராகவே உள்ளதாகவும் விமர்சனங்கள் வருகின்றன.

- Advertisement -

சற்று முன்