- Advertisement -
Homeபொழுதுபோக்கு2வது கணவரும் என்னை ஏமாற்றி பணத்தை எல்லாம் மொத்தமாக சுருட்டி விட்டார் - அலறிய பாடகி...

2வது கணவரும் என்னை ஏமாற்றி பணத்தை எல்லாம் மொத்தமாக சுருட்டி விட்டார் – அலறிய பாடகி சுசித்ரா, என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா…

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பின்னணிப் பாடகியாக அறிமுகமானவர் சுசித்ரா. சில ஹிட் பாடல்களையும் சுசித்ரா பாடியிருக்கிறார். யாரடி நீ மோகினி, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சில படங்களில் நடித்த நடிகர் கார்த்திக் குமாரை காதலித்து சுசித்ரா திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன் சுச்சி லீக்ஸ் மூலம் அவர் சினிமா நட்சத்திரங்கள் குறித்த பல சர்ச்சையான விஷயங்களை பேசி கடும் விமர்சனத்தில் சிக்கினார்.

அதனால் அவரது இமேஜ் டேமேஜ் ஆனது. ஒரு கட்டத்தில் கணவர் கார்த்திக் குமாரும் மனைவி சசித்ராவை விட்டு விலகினார். சினிமாவில் பாடும் வாய்ப்புகளும் பறிபோனது. சில காலம் மன அழுத்தத்தில் இருந்த பாடகி சுசித்ரா பிறகு அதிலிருந்து மீண்டார். ஆனால் அவ்வப்போது பிரபலங்கள் குறித்த சர்ச்சையான விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

- Advertisement -

இதற்கிடையே மும்பையில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதாகவும் அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை பாடகி சுசித்ரா ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, சுச்சி லீக்ஸ் என்ற தரித்திரம் பிடித்த விஷயம் என் வாழ்க்கையில் நடந்த பின் இனி அதைவிட பெரிய விஷயம் எதுவும் நடக்காது என்று நினைத்தேன்.

ஆனால் அதைவிட ஒன்னு நடந்திருச்சு. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நான் ஒருவரை காதலித்தேன். எனது 48 வயதில் கன்றாவியான ஒரு ரிலேஷன்ஷிப்பில் நான் போய் மாட்டிக்கிட்டேன். என் வாழ்வில் எது எல்லாம் நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது எல்லாம் நடந்து விட்டது. அவர் பெயர் சண்முகராஜன். நான் அவரை திருமணம் செய்ததாக கூட ஒரு முறை கூறியிருந்தேன். காரணம் அந்த சமயம் எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்தது.

- Advertisement -

என் வாழ்க்கையை காப்பாற்றுவது போல் என் வாழ்வில் வந்தார். தனுஷ் உன் வாழ்க்கையை கெடுத்து விட்டான். நானும் என் வாழ்வில் நிறைய அடிபட்டு இருக்கேன். என் முதல் மனைவியால் நிறைய கஷ்டப்பட்டேன். இனி உனக்கு நான் எனக்கு நீ என இருப்போம் என்று ஆறுதல் வார்த்தைகளை கூறினார். அதை நம்பி நானும் காதலித்தேன். என் பணத்தை எல்லாம் அவரிடம் கொடுத்தேன். ஆனால் தினமும் என்னை அடித்து மிதித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தினார். எனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக கூறினார்.

ஆனால் அவரது மனைவி என் வீட்டுக்கு வந்து, என் கணவரை என்னிடம் திருப்பிக் கொடுத்துவிடு என்று கெஞ்சினார். அவரை உண்மையாக காதலித்தேன். ஆனால் என் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக மொத்தமாக சுருட்டி விட்டார். அது எவ்வளவு பணம் என்று சொன்னால் தலைசுற்றிவிடும். இப்போது நான் தெளிவாகி விட்டேன். அவர் மீது வழக்கு போட்டுள்ளேன். அவரிடம் இருந்து மொத்த பணத்தையும் ஒரு பைசா கூட விடாமல் வாங்காமல் விட மாட்டேன். இன்னும் 2 மாதத்தில் அந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இனி என்னை நீங்கள் அடிக்கடி நீதிமன்றத்தில் சந்திக்கலாம் என்று பாடகி சுசித்ரா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்