- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நடிகர் அஜீத்குமார் எடுத்த அதிரடி முடிவு, ஏகே ரசிகர்களுக்கு தொடரும் ஏமாற்றம் -...

அந்த விஷயத்தில் நடிகர் அஜீத்குமார் எடுத்த அதிரடி முடிவு, ஏகே ரசிகர்களுக்கு தொடரும் ஏமாற்றம் – கார் ரேஸ் மாதிரியே இதையும் நினைக்க மாட்டாரா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் அஜீத்குமாரின் அடுத்த படத்தையும் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வருகிற நவம்பரில் படப்பிடிப்பு துவங்கி, ஏப்ரலுக்கு படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

சினிமாவில் நடிப்பதை காட்டிலும் கார் ரேஸ்களில் கலந்துக்கொள்வதில்தான் நடிகர் அஜீத்குமாருக்கு அதீத ஆர்வம் காணப்படுகிறது. குட் பேட் அக்லி படத்துக்கு பின் அவரை வைத்த படம் இயக்கவும் தயாரிக்கவும் பலர் காத்துக்கொண்டிருக்கிற நிலையில், 10 மாதங்களுக்கு தொடர்ந்து நடக்கும் கார் ரேஸ்களில் அஜீத்குமார் கலந்துக்கொண்டு விட்டு பிறகுதான், சினிமாவில் நடிக்க வருகிறார்.

- Advertisement -

அஜீத்குமாரை பொருத்த வரை சினிமாவில் நடிப்பதை இரண்டாமிடத்திலும் கார் ரேஸில் கலந்துக்கொள்வதை முதலிடத்திலும் வைத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை எல்லாம் பலவிதங்களில் செலவு செய்து கார் ரேஸ்களில் அஜீத்குமார் கலந்துக்கொள்வதாக ஒரு விமர்சனமும் எழுந்துள்ளது. அதை பற்றி எல்லாம் பொருட்படுத்தாமல் வருகிற அக்டோபர் வரை கார் ரேஸில் நடிகர் அஜீத்குமார் பிஸியாக இருக்கப் போகிறார்.

சீனியர் நடிகர்கள் ரஜினி, கமலை தவிர்த்து விட்டு பார்த்தால் அடுத்த வரிசையில் அதிக லாபம் தரும் முக்கியமான இடத்தில் நடிகர் விஜய் நடிகர் அஜீத்குமார் இருவரும்தான் தமிழ் சினிமாவில் உள்ளனர். நடிகர் விஜய் அரசியலுக்கு போய்விட்டார். அஜீத்குமாரும் விளையாட்டில் ஆர்வமாக இருக்கும் நிலையில், வணிக ரீதியான பாதிப்புகளை தமிழ் சினிமாவில் சந்தித்து வருகிறது.

- Advertisement -

நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் அவரது இடத்தையும் நிரப்பும் வகையில் நடிகர் அஜீத்குமார் ஆண்டுக்கு 3 படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆண்டுக்கு ஒரு படம்தான் நான் நடிப்பேன் என்ற அதிர்ச்சியான அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். ஆண்டின் ஒரு பகுதியை கார் ரேஸூக்கும் மீதி ஒரு பகுதியை சினிமாவுக்கும் என தீர்மானித்து விட்டார் நடிகர் அஜீத்குமார்.

வருகிற நவம்பரில் துவங்கும் நடிகர் அஜீத்குமாரின் அடுத்த படம், வருகிற ஏப்ரல் மாதம் வரை படப்பிடிப்பு நடக்க உள்ளது. அதன்பிறகு ஏப்ரல் 14 அல்லது மே 1ம் தேதி அந்த படம் வெளியாக உள்ளது. இப்படிதான் ஆண்டுதோறும் பாதி நாட்களை சினிமாவுக்கும் மீதி பாதி நாட்களை விளையாட்டுக்கும் என ஒதுக்கி இருக்கிறார் அஜீத்குமார். அதனால் அடுத்த 5 ஆண்டுகளில் அஜீத்குமார் நடித்த படங்களின் எண்ணிக்கை 5 மட்டுமே இருக்கும். அதை தாண்டாது என்பதால் ஏகே ரசிகர்கள் பயங்கர அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்