- Advertisement -
Homeபொழுதுபோக்குபோதிய தியேட்டர் கிடைக்காமல் ஏமாற்றத்தில் மையல் படக்குழுவினர், மைனா பட நடிகருக்கு இப்படி ஒரு...

போதிய தியேட்டர் கிடைக்காமல் ஏமாற்றத்தில் மையல் படக்குழுவினர், மைனா பட நடிகருக்கு இப்படி ஒரு நிலமையா? – என்ன கொடும சார் இது?

- Advertisement -

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த் அமலா பால் நடித்த படம் மைனா. கடந்த 2010ம் ஆண்டில் வெளியான இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்றது. சுருளி கேரக்டரில் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி இருந்த நடிகர் விதார்த்துக்கு இந்த படம் பெரிய அடையாளத்தை கொடுத்தது. அதே போல் மைனா கேரக்டரில் அமலா பால் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

குறிப்பாக இந்த படத்தில் காமெடி நடிப்பில் தம்பி ராமையா நடிப்பு அட்டகாசமாக இருந்தது. பல படங்களில் தம்பி ராமையா காமெடி நடிப்பில் வெளுத்து வாங்க மைனா படம்தான் முக்கிய காரணமாக இருந்தது. இதில் போலீஸ் ஏட்டு கேரக்டரில் தம்பி ராமையா நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் ஜெயில் வார்டன் கேரக்டரில் நடித்தவர் சேது. சிறையில் இருந்து தப்பியோடிய விதார்த்தை பிடிக்க தம்பி ராமையும் சேதுவும்தான் அந்த மலை கிராமத்துக்கு சென்று விதார்த்தை பிடித்து அழைத்து வருவர். அவருடன் அமலா பாலும் வந்துவிடுவார். அப்போது ஒருநாளில் நடக்கும் சம்பவங்களை மையப்படுத்தியே மைனா படம் இருந்தது.

மைனா படத்தில் வார்டன் பாஸ்கர் கேரக்டரில் நடித்த சேது பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் மைனா படத்தில் அவரது நடிப்பு அவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அழுத்தமாகவும் இருந்தது. இப்போது அவர் மையல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

- Advertisement -

மையல் படத்தை பிரபு சாலமனின் உதவியாளர் ஏழுமலை டைரக்ட் செய்து இருக்கிறார். இந்த படத்தில் நாயகியாக சம்ருதிதாரா நடித்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்துக்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை வசனம் எழுதி இருக்கிறார். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று வெளியான மையல் படத்துக்கு வெறும் 37 தியேட்டர்கள் மட்டுமே கிடைத்துள்ளதால் படக்குழுவினர் ஏமாற்றத்தில் உள்ளனர். முதலில் 75க்கும் அதிகமான தியேட்டர்கள் தருவதாக கூறிய நிலையில் கடைசியில் 37 தியேட்டர்கள்தான் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் காட்சி நேரங்கள் சரியானபடி அமையவில்லை. ஒரே நாளில் பல படங்கள் ரிலீஸ் ஆனதால் இந்த அவல நிலை ஏற்பட்டதாக படக்குழுவினர் வருந்துகின்றனர்.

- Advertisement -

சற்று முன்