நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த படம் கீதா கோவிந்தம். இந்த படம் ராஷ்மிகாவுக்கு நல்ல அடையாளத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. படமும் பெரிய வரவேற்பை பெரிய வெற்றியை பெற்றதால், அடுத்தடுத்த படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்தார்.
தொடர்ந்து துல்கர் சல்மான் நாயகனாக நடித்த சீதாராமம் படத்தில் நடித்த ராஷ்மிகாவுக்கு அந்த படமும் நல்ல நடிகையாக பெயர் பெற்றுத் தந்தது. இதைடுத்து தமிழில் நடிகர் விஜயுடன் வாரிசு படத்திலும் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்தார். ஆனால் இந்த படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. இரண்டுமே பிளாப் படங்களாக போய்விட்டன.
அதனால் தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்த படம் புஷ்பா. பான் இந்தியா படமாக புஷ்பா படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், ராஷ்மிகாவின் இமேஜ் திடீரென பலமடங்கு உயர்ந்தது. அடுத்து இந்தியில் அவர் நடித்த அனிமல் படமும் அவரது செல்வாக்கை உயர்த்தியது.
இந்தியில் வௌியான அனிமல் படத்தில் லிப்லாக் முத்தக் காட்சிகளிலும் படுக்கையறை காட்சியிலும் தாராளமான கவர்ச்சி காட்டி ராஷ்மிகா மந்தனா நடித்து பாலிவுட் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். அனிமல் படம் கடும் விமர்சனத்தில் சிக்கினாலும் ராஷ்மிகாவுக்கு அந்த படம் நல்ல அடையாளத்தை இந்தியில் பெற்றுத் தந்துவிட்டது.
இந்த நிலையில் நடிகர் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா 2 படத்தில் ராஷ்மிகா மந்தனா மீண்டும் நாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த படம் கடந்தாண்டில் டிசம்பர் 5ம் தேதி வெளியானது. உலகம் முழுவதும் 1800 கோடி ரூபாய் வசூலித்த இந்த பிளாக் பஸ்டர் படமும் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய வெற்றியாக இருந்துள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் புஷ்பா 3 படமும் உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நடிகர் தனுஷ் நடித்த குபேரா என் படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கி உள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிகர் நாகர்ஜூனா முக்கிய கேரக்டரிலும் நடித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. குபேரா படம் குறித்து சமீபத்தில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழில் இதற்கு முன் எனக்கு கிடைக்காத வெற்றியை குபேரா படம் கண்டிப்பாக பெற்றுத் தரும். தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என்ற இடத்தை பிடித்து விடுவேன், என்று உறுதியாக கூறியிருக்கிறார்.





