- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர்கள் சூர்யா - சிவகார்த்திகேயன் நேரடியாக களத்தில் மோதுகிறார்களா? ஆறிப்போன தனுஷின் இட்லி கடை -...

நடிகர்கள் சூர்யா – சிவகார்த்திகேயன் நேரடியாக களத்தில் மோதுகிறார்களா? ஆறிப்போன தனுஷின் இட்லி கடை – சுடச்சுட வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

- Advertisement -

நடிகர் சூர்யா இப்போது நடித்து வரும் படம் வேட்டை கருப்பு. படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளது. படத்தின் நாயகி திரிஷா நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் எடுத்து முடித்தாகி விட்டது. இப்போது பேட்ச் ஒர்க் பணிகளில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த படம் எப்போது ரிலீஸ் என்பதில் சூர்யா ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் மதராஸி. ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் இப்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகிறது. கொழும்புவில் உள்ள துறைமுகத்தில் இரவு நேரங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 15 நாட்களுக்கு அங்கு ஷூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான படம் இட்லி கடை. கடந்த ஏப்ரல் மாதம் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட இட்லி கடை படம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. அதே நாளில் நடிகர் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் ரிலீஸ் காரணமாக இட்லி கடை ரிலீஸ் தள்ளிப் போனதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு பாடல் காட்சி மற்றும் சில முக்கிய காட்சிகள் எடுக்க வேண்டி இருப்பதால், இட்லி கடை ரிலீஸ் தள்ளி வைப்பதாக அந்த படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் இட்லி கடை படம் வருகிற அக்டோபர் மாதம் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக ஒரு தகவல் இருந்தது. ஆனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இப்போது டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியிருப்பதால் அவர் தலைமறைவாகி விட்டார். அதனால் இட்லி கடை படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை.

- Advertisement -

வேட்டை கருப்பு படத்தை வருகிற தீபாவளி பண்டிகைக்கு தான் வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இட்லி கடை ரிலீஸ் இல்லாததால் இந்த சூழலை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட இயக்குனர் ஆர்ஜே பாலாஜி வருகிற அக்டோபர் 1ம் தேதி வேட்டை கருப்பு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.
அதனால் வருகிற அக்டோபர் 1ம் தேதி சூர்யா நடித்த வேட்டை கருப்பு படமும், அடுத்த நாள் 2ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படமும் ரிலீஸாகின்றன.

இதனால் ஒரு நாள் இடைவெளியில் நடிகர்கள் சூர்யா சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் ஆயுத பூஜை பண்டிகை நாளில் வெளியாகின்றன. அக்டோபர் 1ம் தேதி புதன் ஆயுத பூஜை 2ம் தேதி வியாழன் விஜயதசமி 3வது நாள் வெள்ளிக்கிழமை, அடுத்து சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் என 5 நாட்கள் தொடர்ந்து விடுமுறை காலமாக வருவதால் வரும் அக்டோபரில் 1ம் தேதி இந்த படங்கள் ரிலீஸ் என்பது சூர்யா, சிவகார்த்திகேயனுக்கு ஜாக்பாட்டாக அமைந்துவிட்டது.

- Advertisement -

சற்று முன்