தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். சமீபத்தில்தான், நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் என்ற உறவை இழந்தார். அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்ததை விவாகரத்து செய்துவிட்டார். தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் தனுஷ் நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என்பதை கடந்து இப்போது திரைப்பட இயக்குனராகவும் மாறி விட்டார்.
நடிகர் தனுஷ் தனது 50வது படம் ராயன் படத்தை அவரே டைரக்ட் செய்து நடித்தார். இப்போது இட்லிக்கடை என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். அவர இயக்கத்தில் உருவான மற்றொரு படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படமும் விரைவில் ரிலீஸாக உள்ளது. நடிகர் தனுஷ் இயக்கிய முதல் படம் ப பாண்டி என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளுக்கு முன் நடிகர் தனுஷ் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டா என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் மற்றும் நடிகர் கௌதம் மேனன். இந்த படத்தை தயாரித்ததும் கௌதம் மேனன்தான். கடந்த 2019ம் ஆண்டில் இந்த படம் வெளியானது. தனுஷூக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்திருந்தார்.
இந்த படம் மிகப்பெரிய தோல்வி படமாக நடிகர் தனுஷூக்கு அமைந்தது. இந்த படத்தில் நடித்த வகையில் இயக்குனர் கௌதம் மேனனுக்கும், தனுஷூக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பல ஆண்டுகளாக அந்த கோபமும் எரிச்சலும் தனுஷூக்கு நீடித்து வருகிறது. ஆனால் கௌதம் மேனன் பல வெற்றிப் படங்களை கொடுத்த முன்னணி இயக்குனர். நல்ல நடிகராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யூடியூப் சேனல் ஒன்றுக்காக நடிகர் தனுஷை பேட்டி எடுக்க சென்ற கௌதம் மேனனின் புத்திசாலித்தனத்தை, திறமையை பார்த்து தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார் நடிகர் தனுஷ். ஆனால் அவரது எதிர்பார்ப்புகளுக்கு எதிரான ஒரு மொக்கை படத்தை தந்து மிகப்பெரிய விரக்தியை தனுஷூக்கு அவர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் ஆனதால், இயக்குனர் கௌதம் மேனன் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் என்பவரை தொடர்ந்து கொண்டு, தனுஷை நேரில் சந்திக்க வேண்டும். அவரை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும். அப்பாயின்ட்மெண்ட் கேளுங்கள் என்று கேட்டிருக்கிறார். இதுகுறித்து தனுஷிடம் மேனேஜர் சொன்ன போது, அந்த பெயரை கேட்டாலே எனக்கு எரிச்சலாக இருக்கிறது. இனிமேல் அந்த பெயரை என்னிடம் சொல்லாதீர்கள். அவரை என்னால் சந்திக்கவே முடியாது என்று தனது கோபத்தை காட்டியிருக்கிறார் நடிகர் தனுஷ். இந்த தகவல் இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது.





