- Advertisement -
Homeபொழுதுபோக்குபாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி - ரிலீஸ் தேதியை...

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் நடிப்பில் உருவான தலைவன் தலைவி – ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் மகாராஜா. மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெற்றது. இந்த படம் கடந்த 2024ம் ஆண்டில் ரூ. 100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் இணைந்த நிலையில், சீனாவிலும் வெளியாகி ரூ. 90 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இது நடிகர் விஜய் சேதுபதிக்கு கம்பேக் படமாகவும் அமைந்தது.

அதன்பிறகு ஏஸ் மற்றும் மிஷ்கின் இயக்கிய டிரெயின், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தலைவன் தலைவி ஆகிய 3 படங்களில் நடிகர் விஜய் சேதுபதி நடித்தார். இதில் ஏஸ் படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. எதிர்பார்த்த அளவுக்கு இந்த படத்துக்கு ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை. ஆறுமுக குமார் இந்த படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.

- Advertisement -

ஏஸ் படத்தில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு பப்லு பிருத்விராஜ் அவினாஷ் திவ்யா பிள்ளை ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படம் கடந்த 23ம் தேதி வெளியான நிலையில் 3 நாட்களில் மொத்தமே 4 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி நித்யாமேனன் இணைந்து நடித்துள்ள தலைவன் தலைவி படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக நடித்திருக்கிறார். இதற்காக அவர் படப்பிடிப்பு துவங்கும் முன்பே 2 மாதங்களாக பரோட்டா மாஸ்டராக பயிற்சி பெற்றார் என்ற தகவலும் வெளியானது.

- Advertisement -

ஏஸ் படம் எதிர்பார்த்த அளவுக்கு விஜய் சேதுபதிக்கு வெற்றியை வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தரவில்லை. ஆனால் கடைக்குட்டி சிங்கம் நம்ம வீட்டு பிள்ளை போன்ற பேமிலி சென்டிமென்ட் படங்களை இயக்கிய இயக்குனர் பாண்டிராஜன் இயக்கத்தில் உருவான தலைவன் தலைவி படம் பெரிய வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவன் தலைவி படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வருகிற ஜூன் 18ம் தேதி தலைவன் தலைவி படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்