- Advertisement -
Homeபொழுதுபோக்குபருத்திவீரன் விவகாரத்தில் நடந்தது எல்லாமே அவரால்தான் - இல்லை என்றால் பிரச்னையே வெளியே தெரிந்திருக்காது -...

பருத்திவீரன் விவகாரத்தில் நடந்தது எல்லாமே அவரால்தான் – இல்லை என்றால் பிரச்னையே வெளியே தெரிந்திருக்காது – வெளிப்படையாக பேசிய இயக்குநர் அமீர்

- Advertisement -

இயக்குநர் அமீர் இயக்கத்தில், நடிகர் சிவக்குமார் மகன் கார்த்தி நடிகராக அறிமுகமான படம் பருத்திவீரன். கடந்த 2007ல், 17 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த படம் பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது. முதல் படத்திலேயே கார்த்திக்கு மிகப்பெரிய அடையாளத்தை இந்த படம் கொடுத்தது. இப்போதும், எந்த பொது நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டாலும், என்ன மாமா, சவுக்கியமா என பருத்திவீரன் ஸ்டைலில் பேசியே, நடிகர் கார்த்தி ரசிகர்களிடம் கைதட்டல் வாங்குகிறார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன், இயக்குநர் அமீர் ஒரு நேர்காணலில் பங்கேற்ற போது, நடிகர் கார்த்தி 25வது படம் ஜப்பான் விழா சமீபத்தில் நடந்தது. நீங்கள் ஏன் கலந்துக்கொள்ளவில்லை என கேள்வி வர, பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்து, 17 ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. அதனால் நான் போகவில்லை என்று அமீர் கூறினார். இது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்து பயங்கர சர்ச்சையை கிளப்பியது. அடுத்தடுத்த பிரச்னைகளை உருவாக்கியது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் அமீர் கூறியதாவது, பருத்திவீரன் படம் சார்ந்த தயாரிப்பு பிரச்னை இருப்பது குறித்து அதுவரை யாரிடமும் நான் கூறவில்லை. 17 ஆண்டுகளாக அது வெளியில் யாருக்குமே தெரியாது. அந்த நேர்காணலில், கார்த்தி பட விழாவில் ஏன் பங்கேற்கவில்லை என்ற கேள்வியை கேட்ட போதுதான், வேறுவழியின்றி கோர்ட்டில் வழக்கு நடக்கிற அந்த தகவலை சொன்னேன்.

ஆனால் அதற்கு பதில் சொன்ன அந்த தயாரிப்பாளர், ஆமாம், அவர் சரியாக கணக்கு காட்டவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாததால் கோர்ட்டில் வழக்கு நடக்கிறது என பதில் சொல்லியிருந்தால், அதோடு இந்த பிரச்னை முடிந்திருக்கும். ஆனால் அவர் என்னை பற்றி இழிவாக பேசி, இத்தனை ஆண்டுகாலம் நான் சேர்த்து வைத்த மரியாதையை, என் குடும்பத்தினர் என் மீது வைத்திருந்த நம்பிக்கையை குழி தோண்டி புதைக்கும்படியாக அவதூறாக பேசிவிட்டார்.

- Advertisement -

இதைக்கேட்டு என் மீது அன்பு கொண்ட என் நண்பர்களும், கலைத்துறை சார்ந்த நண்பர்களும், சக கலைஞர்களும் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள். நான் உண்மையை தான் பேசுகிறேன் என்று புரிந்துக்கொண்டு மக்களும் என் பக்கத்தில் இருந்தார்கள். அதற்கு நான் என்ன கைமாறு செய்வதென்றே தெரியவில்லை. அந்த தயாரிப்பாளர் அப்படி பேசியதால்தான் பிரச்னை பெரியதாக மாறியது. இல்லை என்றால், இந்த விஷயம் வெளியே தெரிந்திருக்காது.

என்னை பொருத்த வரை, 17 ஆண்டுகளாக நடந்த பருத்திவீரன் பிரச்னையில் மக்களிடம் இருந்து நீதி கிடைத்துவிட்டது. கோர்ட் தீர்ப்பு எப்படி இருக்க போகிறதென்று தெரியவில்லை. ஆனால் மக்கள் தீர்ப்பில் எனக்கு நீதி கிடைத்துவிட்டது. அதுவே எனக்கு மகிழ்ச்சியாக, திருப்தியாக உள்ளது. என் உண்மையின் மீது மக்களுக்கு கிடைத்த நம்பிக்கை எனக்கு நிம்மதியை தந்துள்ளது, என்று கூறியிருக்கிறார் அமீர்.

- Advertisement -

சற்று முன்