- Advertisement -
Homeபொழுதுபோக்குபொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை வென்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருதுகளை வழங்கும் தவெக...

பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களை வென்ற மாணவ மாணவியருக்கு கல்வி விருதுகளை வழங்கும் தவெக தலைவர் விஜய் – 3 நாட்களுக்கு நடக்கிறதா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய். இப்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ள நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துக்கு பிறகு நடிப்பதில்லை என்ற முடிவில் உள்ளார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள கட்சியை இன்னும் பலப்படுத்தி மக்களிடம் ஆதரவு திரட்டுகிறார்.

நடிகர் விஜய் கடந்த 2023ம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ மாணவியருக்கு ரொக்கப் பரிசுடன் கல்வி விருதுகளை வழங்கி வருகிறார். இதில் முதல் பரிசு ரூ. 25 ஆயிரம் 2ம் பரிசு ரூ. 15 ஆயிரம் 3ம் பரிசு ரூ. 10 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

- Advertisement -

விழா மேடையில் கல்வி விருது சான்றிதழுடன் ரொக்கப் பரிசு தொகையை நடிகர் விஜய் தனது கரங்களால் வழங்கி மாணவ மாணவியரை அவரது பெற்றோருடன் மேடைக்கு வரவழைத்து பொன்னாடை போர்த்தி கவுரவப்படுத்தி வருகிறார். இப்போது 3வது ஆண்டாக இந்த கல்வி விருது வழங்கும் விழா வருகிற 30ம் தேதி நடக்க உள்ளது.

கடந்த 2023ம் ஆண்டில் ஒரே நாளில் 10ம் வகுப்பு பிளஸ் 2 மாணவ மாணவியருக்கு விருது வழங்கப்பட்டதால், விழா முடிய இரவு 10 மணிக்கு மேல் ஆகி விட்டது. அதனால் கடந்த 2024ம் ஆண்டில் 2 நாட்களாக இந்த விழாவை விஜய் நடத்தினார். அப்போதும் அதிக நேரம் விழா முடிய ஆனதால், இந்த முறை அதில் மாற்றம் செய்திருக்கிறார் தவெக தலைவர் விஜய்.

- Advertisement -

நடப்பாண்டில் இந்த கல்வி விருது வழங்கும் விழாவை 3 நாட்களுக்கு நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று கல்வி விருதுகளை ரொக்க பரிசுகளுடன் வழங்க உள்ளார். விருது பெறும் மாணவ மாணவியர் எண்ணிக்கை அதிகம் என்பதோடு மேடையில் அவர்கள் சில நிமிடங்கள் விஜயுடன் இருப்பதால், செல்பி எடுப்பதால் விழா முடிய அதிக நேரம் ஆகி விடுகிறது.

அதனால் 3 கட்டங்களாக இந்த விழா நடக்கிறது. அதன்படி முதல்கட்டமாக வருகிற 30ம் தேதி மாமல்லபுரம் 4 பாயின்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் இந்த விழா நடக்கிறது. இதில் அரியலூர் ராணிப்பேட்டை கடலூர் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் சிவகங்கை சென்னை செங்கல்பட்டு திண்டுக்கல் திருவள்ளூர் தேனி நாகப்பட்டினம் புதுக்கோட்டை பெரம்பலூர் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 68 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இந்த விழாவில் கல்வி விருது வழங்கப்படுகிறது. மற்ற மாவட்ட மாணவர்களுக்கான கல்வி விருது வழங்கும் விழா குறித்த நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்