- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்… அந்த படம் தந்த கசப்பான...

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த நடிகை கீர்த்தி சுரேஷ்… அந்த படம் தந்த கசப்பான அனுபவமாக இருக்குமா?

- Advertisement -

மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இளம் வயதிலேயே மிக நல்ல நடிகையாக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். தமிழில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக மறைந்த நடிகை சாவித்திரி தேவியின் பயோபிக் படத்தில் அவரது கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

தெலுங்கில் மகாநடி தமிழில் நடிகையர் திலகம் என்ற டைட்டில் வந்த அந்த படத்தில் நடித்த கீர்த்திக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது. அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி தேவி கேரக்டரில் வாழ்ந்திருந்தார் என்றே சொல்லலாம். இந்த படத்தில் ஜெமினி கணேசன் கேரக்டரில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.

- Advertisement -

தமிழில் நடிகர் விஜயுடன் பைரவா சர்கார் ரஜினியுடன் அண்ணாத்த விக்ரமுடன் சாமி 2 தனுஷூடன் தொடரி சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் ஜெயம் ரவியுடன் சைரன் 108 என பல படங்களில் நடித்த கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் மலையாளத்தில் இந்தியிலும் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 12ம் தேதி ஆண்டனி தட்டில் என்பவரை நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்தார். 15 ஆண்டு கால நண்பரான அவரை பள்ளி செல்லும் வயதில் இருந்தே காதலித்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் கோவாவில் நடந்தது. இதில் பங்கேற்க தவெக தலைவர் விஜய், திரிஷா தனி விமானத்தில் கோவா சென்றது வைரலானது அது ஒரு தனிக்கதை.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சூர்யா ஆர்ஜே பாலாஜியின் வேட்டை கருப்பு படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். பட பூஜை சமீபத்தில் நடந்தது. இதில் மமிதா பைஜூ நாயகியாக நடிக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதலில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க தான் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

ஆனால் சூர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டார். ஏனெனில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க ஏற்கனவே அவர் கமிட் ஆகி விட்டார். அந்த கால்ஷீட் தேதியில் சூர்யா படத்தில் நடிக்க அழைப்பு வந்ததால், சூர்யா படத்தை கீர்த்தி சுரேஷ் மறுத்துவிட்டார். அதே நேரத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே ஜோடியாக நடித்த தானா சேர்ந்த கூட்டம் படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த கசப்பான அனுபவம் கூட கீர்த்தியின் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்