- Advertisement -
Homeபொழுதுபோக்குசபரிமலையில் பதினெட்டாம் படி ஏறிய மோகன்லால்... மெகா ஸ்டார் மம்முட்டி பெயரிலும் அர்ச்சனை... என்ன காரணம்...

சபரிமலையில் பதினெட்டாம் படி ஏறிய மோகன்லால்… மெகா ஸ்டார் மம்முட்டி பெயரிலும் அர்ச்சனை… என்ன காரணம் தெரியுமா…

- Advertisement -

இந்திய திரை உலகில் ஒவ்வொரு மாநிலத்திற்கான, உச்சபட்ச நட்சத்திரங்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இங்கு இருப்பதால், அந்த நட்சத்திரங்களின் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும்போது திருவிழா கோலமாக காட்சி இருக்கிறது. தமிழ் திரையுலகை பொருத்தவரை ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் அஜித் என நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.

இதே போல் கேரளா திரையுலகையை நாம் எடுத்துக் கொண்டோம் என்றால் சட்டென்று ஞாபகத்திற்கு வருவது மோகன்லாலும், மெகா ஸ்டார் மம்முட்டியும் தான். இருவரும் 90களில் தொடங்கி கோலோச்ச ஆரம்பித்து விட்டார்கள். இவர்களின் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெறுகின்றன.

மலையாளத் திரையுலகம் மட்டுமல்லாமல் மற்ற திரையுலகிலும் இவர்கள் நடிப்பதுதான் இங்கு கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கிறது. சொல்லப்போனால் மோகன்லால் மற்றும் மம்முட்டி என இருவருமே தமிழ் சினிமாவுக்கு நல்ல பரிச்சயமானவர்கள். இருவரும் தனித்தனியே இங்கு நிறைய திரைப்படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அண்மையில் இயக்குனர் கௌதம் மேனன் உடன் மம்முட்டி இணைந்த திரைப்படம் வெளியானது. டொமினிக் என தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம், மலையாள மொழியில் ரிலீஸ் செய்யப்பட்டு கலவையான விமர்சனத்தை பெற்றது. இது ஒரு புறம் இருக்க, மலையாளத்தில் முக்கிய பிரபலமான பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் எம்புரான் திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இது எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் ட்ரெய்லரை முதல் முறையாக ரஜினிகாந்த்துக்கு காட்டி மகிழ்ச்சி அடைந்தார் இயக்குனர் பிரிதிவிராஜ். எம்புரான் திரைப்படம் விரைவில் வெளியாகும் சூழலில், சபரிமலைக்கு சென்று தரிசனம் செய்திருக்கிறார் நடிகர் மோகன்லால்.

பம்பையில் இறங்கி நடை பயணமாக பயணித்த அவர், நடிகர் மம்மூட்டியின் பெயரிலும் அர்ச்சனை செய்திருக்கிறார். மம்மூட்டியின் இயற்பெயர் முகமது குட்டி. அந்தப் பெயரில்தான் அர்ச்சனை கொடுத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறார். இது மலையாளத் திரையுலகை தாண்டி பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. மம்முட்டிக்கு அண்மையில் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. புற்றுநோய் என்று கூறப்பட்ட நிலையில் இதனை மம்முட்டி தரப்பு மறுத்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்