- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் திடீர் மறைவு - சோகத்தில் தமிழ் திரையுலகினர்!

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் திடீர் மறைவு – சோகத்தில் தமிழ் திரையுலகினர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவராக இருந்த நடிகர் ராஜேஷ் இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமா உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பலத்த சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான நடிகர் ராஜேஷ் திடீரென மறைந்தது தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் பலத்த அதிர்ச்சியை தந்துள்ளது.

தமிழ் சினிமாவில் ஒரு பக்குவப்பட்ட நடிகராக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர். எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் சிறப்பான அதே நேரத்தில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகர் ராஜேஷ். திருவள்ளூர் மாவட்டம் மன்னார்குடியில் கடந்த 1949ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி பிறந்தவர் ராஜேஷ். பள்ளி ஆசிரியராக ஆரம்பத்தில் பணி செய்த அவர் ஒரு கட்டத்தில் சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தார்.

- Advertisement -

கடந்த 1974ம் ஆண்டில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை என்ற படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் ராஜேஷ் நடித்திருந்தார். சினிமாவில் நடிகராக ராஜேஷ் அறிமுகமான முதல் படம் இதுதான். இதையடுத்து கன்னிப் பருவத்திலே என்ற படத்தில் ராஜேஷ் நடிப்பு பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் வில்லனாக கே பாக்யராஜ் நடித்திருந்தார்.

தொடர்ந்து அந்த ஏழு நாட்கள் அச்சமில்லை அச்சமில்லை மண்ணுக்குள் வைரம் ராசாத்தி ரோஜாக்கிளி பொங்கலோ பொங்கல் ஆட்டோகிராப் அறை எண் 305ல் கடவுள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் ராஜேஷ் நடித்திருக்கிறார். ஹீரோவாக வில்லனாக குணச்சித்திர கேரக்டர்களில் 150 க்கு மேற்பட்ட படங்களில் நடிகர் ராஜேஷ் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. டிவி சீரியல்களிலும் நிறைய நடித்திருக்கிறார். பல நடிகர்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ராஜேஷின் மனைவி ஜோன் சில்வியா. அவர் ஏற்கனவே மறைந்து விட்டார். திவ்யா என்ற மகளும் தீபக் என்ற மகனும் ராஜேஷுக்கு உள்ளனர். சமீபகாலமாக நிறைய யூடியூப் சேனல்களில் ஆன்மிகம் மற்றும் உடல் நலம் குறித்த நேர்காணல்களில் பங்கேற்று வந்தார் நடிகர் ராஜேஷ். இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. மேலும் நடிகர் ராஜேஷ் மிக தீவிரமாக புத்தக வாசிப்பாளர் என்பது ரசிகர்கள் பலரும் அறியாத விஷயமாக உள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் நடிகர் ராஜேஷ் இருந்த போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துக்கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நடிகர் ராஜேஷின் உடல் சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மூத்த நடிகர் ராஜேஷின் திடீர் மறைவு தமிழ் திரையுலகினர், ரசிகர்களிடையே பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்