- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் என்ன மொழி ஆய்வாளரா? மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? - தக்லைஃப் படம்...

கமல் என்ன மொழி ஆய்வாளரா? மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? – தக்லைஃப் படம் ரிலீஸ் வழக்கை விசாரித்த கர்நாடகா நீதிபதி சரமாரி கேள்வி!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதி கோரியும் அந்தப் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் கோரி கர்நாடகா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, இந்த பிரச்சனை குறித்து பல கேள்விகளை எழுப்பினார். அப்போது நீதிபதி பேசுகையில், கன்னட மொழி குறித்து பேசி கர்நாடகாவில் கமல்ஹாசன் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளார். கன்னட மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளார்.

- Advertisement -

தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்ததற்கு என்ன ஆதாரம் உள்ளது? கமல் என்ன மொழி ஆய்வாளரா? கமல் மன்னிப்பு கேட்டால் பிரச்சனை முடிந்துவிடும். தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்க முடியாது என்கிறார். மன்னிப்பு கேட்கவில்லை என்றால் எதற்காக கர்நாடகாவில் தக்லைஃப் படத்தை திரையிட வழக்கு தொடர வேண்டும்?.

கன்னட மக்களை சிறுமைப்படுத்தி விட்டு சில கோடிகளை சம்பாதிப்பதற்காக கமல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மன்னிப்பு கேட்டால் தான் கமல் சில கோடிகளை சம்பாதிக்க முடியும். இந்த வழக்கு மீண்டும் இன்று மதியம் 2:30 மணிக்கு விசாரணைக்கு வரும். அதற்குள் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இன்று காலை நடந்த விசாரணையின் போது நீதிபதி குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபைக்கு ஒரு விளக்க கடிதம் எழுதி இருந்தார். அதில், நான் பேசியது தவறாக புரிந்து புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கடிதம் மதியம் 2:30 மணிக்கு கர்நாடகா கோட்டில் நடந்த விசாரணையின் போது கமல் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த கடிதத்தை படித்துப் பார்த்த நீதிபதி, கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. தனது கருத்திற்கு மன்னிப்பு கேட்காமல் கமல் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறார். மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? கன்னடம் மக்களின் உணர்வுகளை கமல் குறைத்து மதிப்பிடுகிறார். பிரச்னையின் தீவிரத்தை அவர் உணர வேண்டும். படத்தை விட இந்தியாவின் ஒற்றுமையே பெரிது என்று நீதிபதி கூறினார். இதையடுத்து கர்நாடகாவில் மட்டும் தக்லைஃப் படம் ரிலீஸ் செய்வது தள்ளி வைக்கப்படுகிறது என்று கமல் தரப்பில் கூறப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.

- Advertisement -

சற்று முன்