- Advertisement -
Homeபொழுதுபோக்குகுபேரா பட இசை வெளியீட்டு விழாவில் அவ்வளவு ஆவேசமாக தனுஷ் பேசியது ஏன்? - ...

குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் அவ்வளவு ஆவேசமாக தனுஷ் பேசியது ஏன்? – பின்னால் அந்த நடிகை மீதான காண்டுதான் காரணமா?

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் வருகிற 20ம் தேதி குபேரா படம் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டில் தனுஷ் நடித்த ராயன் படத்துக்கு பிறகு இந்த ஆண்டில் தனுஷ் நடித்த குபேரா படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா டைரக்ட் செய்திருக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 2 தினங்களுக்கு முன் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா இயக்குனர் சேகர் கம்முலா இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் தனுஷ் சற்று கோபமாக பேசினார்.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, என்னுடைய படம் ரிலீஸ் ஆவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே என்னைப் பற்றிய வதந்திகளை சிலர் பரப்ப தொடங்கி விடுகிறார்கள். ஆனால் தீப்பந்தம் போல என்னுடைய ரசிகர்கள் இருக்கும் வரை நான் முன்னேறிக் கொண்டே தான் இருப்பேன். 23 ஆண்டுகளாக எனக்கு வழித்துணையாக என் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ரசிகர்கள் இருக்கும் வரை ஒரு செங்கல்லை கூட உங்களால் பிடுங்க முடியாது. தம்பிகளா கொஞ்சம் ஓரமா போய் விளையாடுங்க. இங்கே இருப்பவர்கள் என்னுடைய ரசிகர்கள் மட்டுமல்ல. என்னுடைய கம்பெனியன்ஸ். சும்மா நாலு வதந்திகளை கிளப்பி விட்டு என்னை காலி செய்து விடலாம் என நீங்கள் நினைத்தால் அது உங்களுடைய முட்டாள்தனம் என்று பேசியிருந்தார்.

- Advertisement -

நடிகர் தனுஷ் இப்படி பேசுவதற்கு பின்னால் நடிகை நயன்தாரா தான் இருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏனென்றால் சமீபகாலமாக தனுஷூக்கும் நயன்தாராவுக்கும் பிரச்னை இருந்து வருகிறது. தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படப்பிடிப்பில் எடுத்த வீடியோக்களை நடிகை நயன்தாரா தனது திருமண ஆல்பத்தில் பயன்படுத்தி இருந்தார்.

இந்த விஷயத்தில் தயாரிப்பாளரான என் அனுமதியின்றி நான் தயாரித்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த வீடியோக்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பயன்படுத்தியதாக தனுஷ் கோர்ட்டில் ரூ. 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளதார். அந்த வழக்கு இப்போது விசாரணையில் இருந்து வருகிறது. அதனால் தன்னைப் பற்றிய அவதூறுகளை தொடர்ந்து பரப்பும் நயன்தாரா தரப்பினர் மீதுதான் நடிகர் தனுஷ் கோபமாக பேசியிருப்பதாக இணையத்தில் தகவல் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்