- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி வெற்றியை கொடுத்தும் இப்படி ஒரு சிக்கலா? - அப்செட்டில் இருக்கும் ஆதிக்...

குட் பேட் அக்லி வெற்றியை கொடுத்தும் இப்படி ஒரு சிக்கலா? – அப்செட்டில் இருக்கும் ஆதிக் ரவிச்சந்திரன்… அஜீத்குமார் தான் இதற்கு காரணமா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த ஏப்ரல் 10ம் தேதி வெளியான படம் குட் பேட் அக்லி. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்ட் செய்திருந்தார். அஜீத்குமாருடன் திரிஷா மற்றும் சிம்ரன் பிரபு அர்ஜூன்தாஸ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். குட் பேட் அக்லி பெரிய வெற்றிப் படம் என்று கூறப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் மட்டுமே தியேட்டர்களில் வசூலில் நல்ல லாபம் கிடைத்தது.

ஆனால் இந்த படத்தை தயாரித்த வகையில் தயாரிப்பாளருக்கு, ஒட்டுமொத்தமாக இந்த படம் பெரிய நஷ்டத்தை தந்தது என்றும் தகவல் வெளியானது. குட் பேட் அக்லி படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரித்திருந்தது. குட் பேட் அக்லி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்ததால், மீண்டும் தனது அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குமாறு நடிகர் அஜித்குமார் கூறிவிட்டார்.

- Advertisement -

அதனால் ஏகே 64 படம் அஜீத்குமார் ஆதிக் கூட்டணியில் தான் உருவாகிறது என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஆனால் இந்த படத்தை தயாரிக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒத்துக் கொள்ளாமல் பின்வாங்கி விட்டது. அடுத்ததாக தற்போது 10 படங்களை தயாரிப்பதாக அறிவித்துள்ள வேல்ஸ் பிலிம் நிறுவனம்தான், ஏகே 64 படத்தை தயாரிக்க முதலில் பேச்சுவார்த்தை நடந்து வந்தது.

ஆனால் இப்போது வேல்ஸ் பிலிம் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏகே 64 படத்தை தயாரிக்கும் முடிவில் இருந்து விலகிவிட்டார் என்று கூறப்படுகிறது. இதனால் ஏகே 64 படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த தயாரிப்பு நினைவும் நிறுவனமும் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் ஸ்டோரி டிஸ்கசன், ஸ்கிரிப்ட் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான முழு செலவையும் நடிகர் அஜீத்குமார் தரப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஏகே 64 படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன் வராததற்கு முக்கிய காரணம் நடிகர் அஜீத்குமார் தான் என்றும் சொல்லப்படுகிறது.

அஜீத்குமார் தனது 64வது படத்தில் நடிக்க 200 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் சம்பளம், இயக்குனர் இசையமைப்பாளர் சம்பளம், தயாரிப்பு செலவு என அனைத்தையும் சேர்த்தால் ஏகே 64 படத்தை தயாரிக்க 350 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை செலவாகும். இதில் ஓடிடி சாட்டிலைட் ஆடியோ ரைட்ஸ் மூலம் 200 கோடி ரூபாய் வரை மீட்க முடியும். மீதி 200 கோடி ரூபாய் தியேட்டர்கள் மூலமாகவே வசூல் செய்ய வேண்டும். ஆனால் குட்பேட் அக்லி, விடாமுயற்சி படங்களுக்கு அந்த அளவுக்கு வசூல் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஏகே 64 படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை. குறிப்பாக அஜீத்குமார் சம்பளம் கணிசமாக குறைத்தால் சில தயாரிப்பாளர்கள் முன்வர வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்