- Advertisement -
Homeபொழுதுபோக்குஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர் நடிகைகளுடன் சாப்பிட அமர்ந்த நடிகர் விஜய், கடைசியில் அவர் செய்த...

ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர் நடிகைகளுடன் சாப்பிட அமர்ந்த நடிகர் விஜய், கடைசியில் அவர் செய்த அந்த விஷயம் – நொந்து போன சக நடிகர் சொன்ன தகவல் இது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருப்பவர் நடிகர் விஜய். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராக உள்ளார். இப்போது தனது 69வது படத்தில் நடித்து வரும் அவர், இந்த படத்துடன் சினிமாவுக்கு குட்பை சொல்வதாக ஏற்கனவே அறிவித்து விட்டார். நேற்று, சென்னையில் நடந்த அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விஜய், ஆளுங்கட்சியை விமர்சித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே 12பி குஷி பாலா அன்பே அன்பே லேசா லேசா இயற்கை உள்ளம் கேக்குமே இன்பா வாரிசு உள்ளிட்ட பல படங்களில் ஷ்யாம் நடித்திருக்கிறார். பெரிய நடிகராக ஹிட் படங்களை தராவிட்டாலும் ஷ்யாம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் விஜய்க்கு நெருக்கமான நண்பர்களில் இவரும் ஒருவர்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய போது நடிகர் விஜய் குறித்து ஷ்யாம் கூறியதாவது, வாரிசு பட ஷூட்டிங்கில் விஜய் நான் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துக்கொண்டு இருந்தோம். அப்போது படக்குழு சார்ந்த சிலர், விஜயை அண்ணா அண்ணா என்கிறாயே, அவர் நம்முடன் ஒரு நாள் அமர்ந்து சாப்பிடுவாரா என்று என்னை கலாய்த்தனர்.

நான் விஜயிடம் பேசி, அவரை எங்களுடன் சாப்பிட வருமாறு அழைத்தேன். அவரும் ஓகே வருகிறேன் என்று கூறிவிட்டார். அன்று டைரக்டர் வம்சி வீட்டில் இருந்து ஏகப்பட்ட உணவு ரகங்கள் வந்துவிட்டது. டைனிங் டேபிள் முழுக்க பிரியாணி, சிக்கன், மட்டன், பிஷ், போட்டி என ஏராளமான வகைகள் வைக்கப்பட்டு இருந்தது. டைனிங் டேபிளில் இருந்த பலரும் விஜய் பக்கமாக அந்த நான்வெஜ் அயிட்டங்களை வைத்து, அவரை உபசரித்தனர்.

- Advertisement -

நானும் அதை எல்லாம் அவர் பக்கமாக வைத்து சாப்பிடுங்க, சாப்பிடுங்க என்று ஆர்வமாக கூறினேன். அப்போது விஜய், ஏய் இரு இரு எல்லார் கூடயும் சேர்ந்து சாப்பிடமுன்னு சொன்னே. அதுக்கு நான் சம்மதிச்சு வந்தேன். ஆனா இந்த அயிட்டம் எல்லாம் நான் சாப்பிடறேன்னு சொல்லலையே… என்று கூறினார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது.

அவருக்கு பின்னால் திரும்பி நின்றிருந்த அவரது உதவியாளரிடம், நம்ம தயிர் சாதம், ஊறுகாய் எடுத்துட்டு வா என்றார். பிறகு அதை தான் அவர் எங்களுடன் அமர்ந்து ஜாலியாக பேசியபடி சாப்பிட்டார். அத்தனை நான் வெஜ் அயிட்டங்கள் டேபிள் முழுவதும் இருந்தும் அதை சாப்பிட நாங்கள் வற்புறுத்தியும் தன்னுடைய உடல் ஆரோக்கியத்துக்காக அதை நொடியில் தவிர்த்துவிட்டு தயிர்சாதம், ஊறுகாய் சாப்பிட்ட அவரது மனப்பக்குவம், டயட் கண்ட்ரோல் என்னை திக்குமுக்காட செய்துவிட்டது, என்று ஷ்யாம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்