- Advertisement -
Homeபொழுதுபோக்குவிவாகரத்து செய்து பிரிந்து போன முதல் கணவர் - விபத்தில் மறைந்த 2வது கணவர் -...

விவாகரத்து செய்து பிரிந்து போன முதல் கணவர் – விபத்தில் மறைந்த 2வது கணவர் – விஜய் பட நடிகைக்கு வாழ்க்கையில் நேர்ந்த சோகம்… ஆனா 5 வருஷமா இப்படி வாழ்கிறாரே?

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த ஆரம்பத்தில் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்த படம் பூவே உனக்காக. இயக்குனர் விக்ரமன் இயக்கிய இந்த படத்தில் விஜய் நாயகனாகவும் சங்கீதா நாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் ஜெய்கணேஷ் மலேசியா வாசுதேவன் நாகேஷ் எம்என் நம்பியார் அஞ்சு அரவிந்த் சார்லி மதன்பாப் என பலர் நடித்திருந்தனர்.

கடந்த 1996ம் ஆண்டில் வெளியான இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது என்ற ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் நடிகர் முரளி நடனமாடியிருந்தார். நாளைய தீர்ப்பு செந்தூரப்பாண்டி தேவா ரசிகன் என 4 படங்களை தொடர்ந்து விஜய் நடித்த இந்த படம்தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரத்தை விஜய்க்கு பெற்றுத் தந்தது.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் அஞ்சு அரவிந்தை ஒரு தலையாக காதலிப்பார். பிறகு அஞ்சு அரவிந்த் வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாக விஜயிடம் கூறுவார். தன் காதலி தன் காதலருடன் சேர வேண்டும் என்பதற்காக பிரிந்து போன அவர்களது 2 குடும்பங்களை விஜய் போராடி சேர்த்து வைப்பதுதான் இந்த படத்தின் கதை. பெரிய அளவில் விஜய்க்கு பேர் வாங்கி தந்த முதல் படமே இதுதான்.

பூவே உனக்காக படத்தில் நடித்த அஞ்சு அரவிந்த் பிறகு படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற அவர் கூறியதாவது, என்னுடைய முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் 2வது திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அந்த திருமணமும் பெரிய சோகத்தில் முடிந்து விட்டது.

- Advertisement -

கல்யாணமான சில நாட்களில் எனது 2வது கணவர் இறந்து விட்டார். இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதன் பிறகு வாழ்க்கை சில ஆச்சரியங்களை எனக்கு கொடுத்தது. அந்த சூழ்நிலையில் அவரது பள்ளிப் பருவத்து நண்பர் சஞ்சய் அம்பல பரம்பத் என்பவரை சந்திக்க நேர்ந்தது. எங்களது நட்பு பின்னாளில் காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக பெங்களூரில் அவருடன் வாழ்ந்து வருகிறேன் என்று அஞ்சு அரவிந்த் கூறியிருக்கிறார்.

தனது வாழ்க்கையில் 2 முறை குடும்ப வாழ்க்கைக்குள் சென்ற நடிகை அஞ்சு அரவிந்த் முதல் கணவர் பிரிந்தும் 2வது கணவர் மறைந்தும் போய் ஆதரவற்ற நிலையில் நிர்கதியாக நின்றிருக்கிறார். இந்த சூழலில் தனது பள்ளி கால நண்பருடன் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் 5 ஆண்டுகளாக பெங்களூருவில் வாழ்ந்து வருகிறார். திருமண வாழ்வில் ஏற்பட்ட சோகம், கடைசியில் தாலி கட்டாமல் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தும் நிலைக்கு அவரை ஆளாக்கி விட்டதே, இப்படி வாழ்கிறாரே என்று ரசிகர்கள் பலரும் வருத்தப்பட்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்