நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது முதல் இப்போது முதல்வராக உள்ள இந்த சூழல் வரை நடிகர் சத்யராஜ் விஜய்க்கு எதிராக பேசி வருகிறார். குறிப்பாக அவரது மகள் திவ்யா சத்யராஜ் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ள நிலையில் மகளுக்கு ஆதரவாகவும் திமுகவின் விசுவாசியாகவும் சத்யராஜ் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
ஆனால் அதே நேரத்தில் நடிகர் சத்யராஜின் மகன் சிபிராஜ் தீவிரமான விஜய் ரசிகராக இருந்து வருகிறார். தொடர்ந்து தவெக ஆட்சிக்கும் முதல்வர் விஜய்க்கும் ஆதரவாக தனது பதிவுகளை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் நடிகர் சத்யராஜ் சமீபத்தில் திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுகவின் கட்டப்பா என்று கூட என்னை சொல்லுங்கள். அதற்காக நான் கோபித்துக்கொள்ள மாட்டேன். திமுக என்ற ஆலமரத்துக்கு நிறைய விழுதுகள் உள்ளது. நான் அந்த ஆல மர நிழலில் இளைப்பாறுபவன் என்றும் பேசியிருந்தார்.
நடிகர் விஜயுடன் நடிகர் சத்யராஜ் நண்பன் மெர்சல் தலைவா ஆகிய 3 படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இதில் தலைவா படத்தில் விஜய்க்கு அப்பாவாகவும் நண்பன் படத்தில் கல்லூரி மாணவர் விஜய்க்கு பிரின்ஸிபால் கேரக்டரிலும் நடிகர் சத்யராஜ் நடித்திருந்தார்.
ஆனால் ஜனநாயகன் படத்தில் விஜயுடன் சத்யராஜ் மறுத்துவிட்ட தகவல் இப்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குனர் எச் வினோத் கூறியதாவது, ஜனநாயகன் படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்த கேரக்டருக்காக முதலில் சத்யராஜ் மற்றும் பிரகாஷ்ராஜ் இரண்டு பேரில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிட்டு இருந்தோம்.
நடிகர் சத்யராஜின் தேதிகள் ஒத்து வராததால் இறுதியில் அந்த கேரக்டரில் பிரகாஷ்ராஜை நடிக்க வைத்தோம். அதேபோல் கௌதம் மேனன் நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஆரம்பத்தில் பிரகாஷ்ராஜை தான் நடிக்க வைத்தோம் என்றும் இயக்குனர் எச் வினோத் கூறியிருக்கிறார். சத்யராஜ் நடிக்க மறுத்ததால் அவரது கேரக்டரில் பிரகாஷ் ராஜூம், பிறகு பிரகாஷ் ராஜ் கேரக்டரில் கௌதம் மேனனும் நடித்ததை எச் வினோத் தெரிவித்துள்ளா்.





