- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறதா? திடீரென காஷ்மீருக்கு கிளம்பும் படக்குழு, என்னவா இருக்கும்?

லியோ படத்தின் வெளியீடு தள்ளிப்போகிறதா? திடீரென காஷ்மீருக்கு கிளம்பும் படக்குழு, என்னவா இருக்கும்?

- Advertisement -

விஜய்- லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள “லியோ” திரைப்படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு இத்திரைப்படத்திற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். இது விஜய் நடிக்கும் திரைப்படம் என்பதை தாண்டி இது லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் என்ற விஷயமே ரசிகர்களிடம் மேலோங்கி இருப்பதாக தெரிய வருகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு இயக்கிய “விக்ரம்” திரைப்படம் வேற லெவலில் ஹிட் அடித்தது என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிந்திருப்பார்கள்.

“விக்ரம்” திரைப்படத்தின் வெற்றி, இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லெவலை எங்கோ கொண்டுசென்றுவிட்டது. இந்திய சினிமாவின் பல நடிகர்கள் லோகேஷ் கனகராஜ்ஜின் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற ஆவலோடு இருக்கிறார்கள் என்று கூறினால் கூட அது மிகையாகாது. அந்தளவுக்கு இந்திய சினிமாவையே தமிழ் சினிமாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த இயக்குனராக லோகேஷ் கனகராஜ் திகழ்ந்து வருகிறார்.

இவ்வாறு இந்திய திரையுலகின் மிக விருப்பத்திற்குரிய இயக்குனராக திகழும் லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து  “லியோ” திரைப்படத்தை இயக்கி வருவது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக இத்திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான் போன்ற  பல நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இத்திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனரான அனுராக் காஷ்யப் நடித்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

“லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து  சென்னையில் பல காட்சிகள் படமாக்கப்பட்டது. சில வாரங்களுக்கு முன்புதான் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்ததாக செய்திகள் தெரிவித்தன. ஆனால் தற்போது மீண்டும் “லியோ” படக்குழுவினர் காஷ்மீருக்கு சென்றுள்ளனராம். அங்கு மீதமுள்ள சில காட்சிகளை, அதாவது Patch Work என்று கூறப்படும் காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம். எனினும் இதனால் “லியோ” திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போகாது என்று கூறப்படுகிறது.

சற்று முன்