- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதுவரை விஜய் வெளியே சொல்லாத அந்த ரகசியம் - அரசியல்வாதி ஆனபின்பு பொத்தி வெச்ச விஷயம்...

இதுவரை விஜய் வெளியே சொல்லாத அந்த ரகசியம் – அரசியல்வாதி ஆனபின்பு பொத்தி வெச்ச விஷயம் இனி வெளிச்சத்துக்கு வந்துதானே ஆகணும்?

- Advertisement -

சினிமா, அரசியல், விளையாட்டு இந்த மூன்று துறைகளில் இருந்தால் விரைவில் பணம் கோடி கோடியாக சம்பாதிக்கலாம். பெயர், புகழ், செல்வாக்கு மிக விரைவில் கிடைத்து விடும் என்ற காரணத்தினால்தான் எப்போதுமே இந்த துறைகளில் போட்டி அதிகமாக இருக்கிறது.

ஆனால் சினிமாவில் நடிக்க நடிப்பு திறமை வேண்டும். கேமரா முன் நின்று பேச வேண்டும். நடிக்க வேண்டும். சிரிக்க வேண்டும். அழ வேண்டும். அதே போல், விளையாட்டிலும் திறமை இருந்தால்தான் நிலைத்து நிற்க முடியும். ஆனால் அரசியலில் நீடித்திருக்க, மைக் முன்னால் நின்று சரளமாக, சங்கடமே இல்லாமல் பொய் பொய்யாக பேசத் தெரிந்தால் போதும். எளிதில் ஜெயித்து விடலாம். இப்படி பேசிய பேசியே ஆட்சியை பிடித்தவர்கள் என்று கருணாநிதி போன்றவர்களை சொல்வதுண்டு.

- Advertisement -

இப்படி அரசியலில், சினிமாவில் நுழைந்து கோடி கோடியாக சம்பாதிப்பவர்களில் பலரும் விவரமாக தான் இருக்கின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், நயன்தாரா, ராதா, அம்பிகா, செந்தில் என பலரும் சொத்துகளை வாங்கி போட்டு விடுகின்றனர். பினாமி பெயர்களில் பிஸினஸ் செய்கின்றனர். வீடுகள், அபார்ட்மெண்ட்களை கட்டி வாடகைக்கு விடுகின்றனர். சினிமாவில் நடிக்க வாய்ப்பில்லாத போதும், லட்சக்கணக்கில் மாதந்தோறும் வருவாய் கொட்டுகிறது.

சினிமா நடிகர், நடிகையர் சிலரை போல நடிகர் விஜயும் பினாமி பெயர்களில் சில பிஸினஸ்களில் ஈடுபட்டு வருகிறார். அதில் மிக முக்கியமானது தனது அம்மா ஷோபா மற்றும் மனைவி சங்கீதா பெயரில் சகல நவீன வசதிகளுடன் பொலிவான திருமண மண்டபங்களை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதன் மூலம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் வருமானம் விஜய்க்கு வருகிறது.

- Advertisement -

சென்னை போரூரில், நடிகர் விஜய்க்கு சொந்தமான சங்கீதா திருமணம் உள்ளது. ஒரே நேரத்தில் 1500 பேர் வரை கூடும் இடவசதி கொண்ட இந்த திருமண மண்டபத்தில், தங்கும் தனி அறைகள் 8 இருக்கிறது. மண்டபம் மட்டுமே வாடகைக்கு விடப்படுகிறது. சமையல், டிஜே போன்றவற்றை விரும்பும் வகையில் அமைத்துக்கொள்ள இங்கு வசதி உள்ளது.

இந்த திருமண மண்டபத்தில் ஒரு நாள் வாடகை ரூ. 2.30 லட்சம். அரைநாள் வாடகை 90 ஆயிரம் ரூபாய் மட்டுமே. முன்பணாக ரூ. 1.50 லட்சம் ரொக்கமாக தர வேண்டும். ஆன்லைன் சேவை கிடையாது. 18 சதவீதம் ஜிஎஸ்டி வரிகள் தனியாக கட்ட வேண்டும் என்ற நிலையில், சென்னையில் உள்ள மண்டபங்களில் இதுவும் ஒரு காஸ்ட்லியான மண்டபமாக உள்ளது. ஆனால் 2026ல் விஜய் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது, வேட்பு மனு தாக்கலில் இந்த சொத்து விவரங்களை எல்லாம் கணக்கு காட்ட வேண்டும். அப்போது இதுவரை பொத்தி வைத்த ரகசியம் எல்லாம் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

- Advertisement -

சற்று முன்