- Advertisement -
Homeபொழுதுபோக்குதுல்கர் சல்மான் ரொம்ப லக்கியான ஹீரோ தான், தக்லைஃப் படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனம் -...

துல்கர் சல்மான் ரொம்ப லக்கியான ஹீரோ தான், தக்லைஃப் படம் பார்த்த ரசிகர்கள் விமர்சனம் – அதுக்கு பின்னாடி இப்படி ஒரு தரமான சம்பவம் இருக்கா?

- Advertisement -

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மம்முட்டி. 70 வயதுகளை கடந்தும் இன்னும் ஹீரோவாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழிலும் தளபதி மறுமலர்ச்சி ஆனந்தம் மக்கள் ஆட்சி கிளிப்பேச்சு கேட்கவா என பல படங்களில் நடித்திருக்கிறார். மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் மலையாளம் தமிழ் தெலுங்கு மொழி படங்களில் முக்கிய நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆண்டில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றது. 100 கோடி ரூபாய் மேல் வசூலை வாரி குவித்தது. இந்த படத்தில் நாயகியாக மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். இந்த படம் துல்கர் சல்மானுக்கு அவரது சினிமா கேரியரில் மிக முக்கியமான ஒரு படமாக அமைந்தது.

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் சிம்பு திரிஷா அபிராமி அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் தக்லைஃப். இந்த படம் நேற்று கர்நாடகா மாநிலம் தவிர்த்து உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு தக்லைஃப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. நாயகன் படம் போல இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்களை கமலும், மணிரத்னமும் ஏமாற்றி விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.

தக்லைஃப் படத்தில் முதலில் சிம்பு கேரக்டரில் நடிக்க கமிட் ஆனவர் நடிகர் துல்கர் சல்மான்தான். அதே போல் அசோக் செல்வன் கேரக்டரில் நடிக்க நடிகர் ஜெயம் ரவியும் கமிட் செய்யப்பட்டார். ஆனால் மணிரத்னம் கேரக்டர் குறித்து சொல்லாமல் இழுத்தடித்தது, சம்பளத்தை வெகுவாக குறைத்தது போன்ற காரணங்களால் இந்த படத்தில் இருந்து துல்கர் சல்மான் விலகினார். அதன்பிறகு ஜெயம் ரவியும் விலகி விட்டார்.

- Advertisement -

அதற்கு பின்புதான் துல்கர் சல்மான் கேரக்டரில் சிம்புவும் ஜெயம் ரவி கேரக்டரில் அசோக் செல்வனும் நடித்ததாக கூறப்படுகிறது. இந்த படத்தில் சிம்பு கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்திருந்தால் சிம்பு கேரக்டரை பார்க்கும் போது செக்கச் சிவந்த வானம் கேரக்டர் நினைவு வராமல் மணிரத்னம் தவிரத்திருக்கலாம். இந்த படத்தின் மைனஸ் பாயிண்டுகளில் சிம்பு வரும் பல காட்சிகள், செக்கச் சிவந்த வானம் படக்காட்சிகளை நினைவூட்டுவதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் தக்லைஃப் படத்தில் துல்கர் சல்மான் நடிக்க மறுத்தது அவரது பெரிய அதிர்ஷ்டம் என்றும் ரசிகர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் தக்லைஃப் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. இந்த படத்தில் நடிக்க மறுத்ததால்தான் லக்கி பாஸ்கர் படத்தில் துல்கர் சல்மான் நடிக்க முடிந்தது. அந்த படமும் அவரது கேரியரில் மாஸ் ஹிட் படமாக அமைந்தது. அதனால் துல்கர் சல்மான் உண்மையிலேயே லக்கிதான் என்று ரசிகர்கள் அவரை பாராட்டுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்