- Advertisement -
Homeபொழுதுபோக்குகமல் உடன் சிம்பு நடித்தால்… அவரோட அப்பா டி ராஜேந்தர் சும்மா இருப்பாரா? - போட்றா...

கமல் உடன் சிம்பு நடித்தால்… அவரோட அப்பா டி ராஜேந்தர் சும்மா இருப்பாரா? – போட்றா வெடிய… என குதூகலித்த தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஜாம்பவான் நடிகர்களாக அந்த காலத்தில் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் இருந்தனர். இப்போது அந்த இடத்தில் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருக்கின்றனர். இவர்களது படங்களில் ஏதேனும் ஒரு கேரக்டர் கிடைத்தால் போதும், சம்பளமே இல்லாமல் நடிக்க தயார் என்ற நிலையில்தான் பல நடிகர்கள் நடிகைகள் இருந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் ரஜினி கமல் பெரிய நட்சத்திரங்களாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் மற்றொரு நடிகரும் அவர்களை போல சூப்பர் ஹிட் படங்களை தந்துக்கொண்டிருந்தார். அவர்தான் நடிகர் டி ராஜேந்தர். அவர் தனது படங்களை அவரே டைரக்ட் செய்து நடித்தார். அவரே பாடல்களை எழுதினார், அவரே அவரது பாடல்களுக்கு இசையமைத்தார். அவரே தனது படங்களை தயாரிக்கவும் செய்தார்.

1980களில் டி ராஜேந்தர் படங்கள் என்றாலே திருவிழா கூட்டம் போல திரையரங்குகள் காணப்படும். குடும்ப கதைகள் காதல் கதைகளை மையப்படுத்திய டி ராஜேந்தரின் படங்களுக்கு பெண்கள் மத்தியில் பெரிய ஆதரவு இருந்தது. அந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிம்பு அப்போதே ரசிகர்களால் லிட்டில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு நடிகர் கமலுடன் தக்லைஃப் படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். கடந்த 5ம் தேதி தக்லைஃப் படம் வெளியான நிலையில் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை. கமல் சிம்பு நடிப்பு சிறப்பாக இருந்தாலும் கதை திரைக்கதையில் மணிரத்னம் கோட்டை விட்டதால் படம் பிளாப் என்று கமல் ரசிகர்களே வெளிப்படையாக கூறுகின்றனர்.

கமலுடன் சிம்பு நடித்த நிலையில் இப்போது ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் அவரது அப்பா நடிகர் டி ராஜேந்தர் நடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கூலி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி கூலி படம் ரிலீஸாக உள்ளது.

இதற்கிடையே கூலி படத்தில் வரும் முதல் பாடலை வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது. அனிருத் இசையில் உருவான சிக்கிட்டு வைப் என்ற பாடல் கிளிம்ஸ் ஆக ஏற்கனவே வெளியான நிலையில் இப்போது முழு பாடலாக இதை விரைவில் வெளியிட உள்ளனர். இந்த பாடலின் பிரமோ வீடியோவில் அனிருத் உடன் இணைந்து நடிகர் டி ராஜேந்தரும் நடித்து நடனமாடி இருக்கிறார். இந்த ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிந்தது என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்