- Advertisement -
Homeபொழுதுபோக்குகூலி படத்தில் ஸ்ருதிஹாசன் கேரக்டர் குறித்து வெளியான தகவல்… கிளைமாக்ஸ்சில் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்குதா?...

கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் கேரக்டர் குறித்து வெளியான தகவல்… கிளைமாக்ஸ்சில் இப்படி ஒரு டிவிஸ்ட் இருக்குதா? – டைரக்டர் லோகேஷ் சம்பவம் செஞ்சுட்டாரா?

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் கூலி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த படம் வருகிற ஆகஸ்ட் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது.

மாநகரம் கைதி விக்ரம் மாஸ்டர் லியோ படங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் இணைந்துள்ள முதல் படம் இது. ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. தமிழ் சினிமாவில் 1000 கோடி ரூபாய் வசூலை இதுவரை எந்த படமும் எட்டாத நிலையில் இந்த படம் அந்த சாதனையை படைக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர்.

- Advertisement -

கூலி படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் கன்னட நடிகர் உபேந்திரா தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா இந்தி நடிகர் அமீர்கான் மலையாள நடிகர் சவுபிர் சாஹிர் மற்றும் சத்யராஜ் நித்யா ராம் ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். மேலும் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருக்கிறார்.

கடந்த 1986ம் ஆண்டில் வெளியான மிஸ்டர் பாரத் படத்துக்கு பிறகு 38 ஆண்டுகள் கழித்து சத்யராஜ் ரஜினி மீண்டும் இந்த படத்தில் இணைந்திருக்கிறார்கள். மேலும் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இயக்குனர் லோகேஜ் கனகராஜை தனது இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்க வைத்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் கூலி படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ரஜினியின் மகளாக நடித்திருப்பதாக ஆரம்பத்தில் தகவல் வெளியானது. ஆனால் உண்மையில் அவர் நடிகர் சத்யராஜின் மகளாக தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார். அதே போல் இந்த படத்தில் சத்யராஜ் வில்லன் இல்லை, ரஜினியின் நண்பராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் மேலும் ஒரு புதிய தகவலாக ஸ்ருதிஹாசன் சத்யராஜின் மகள் கேரக்டரில் நடித்திருந்தாலும் படத்தின் கிளைமேக்ஸில் பெரிய டிவிஸ்ட் இருக்கிறது. அப்போதுதான் ஸ்ருதிஹாசன் குறித்த உண்மை ரசிகர்களுக்கு தெரிய வரும் என்கிற நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்திருக்கிறார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்