- Advertisement -
Homeபொழுதுபோக்குகேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு -...

கேப்டன் மகன் சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு – அடேங்கப்பா… இத்தனை தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறதா?

- Advertisement -

மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடித்த படம் படை தலைவன். டைரக்டர் அன்பு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் யாமினி சந்தர் கஸ்தூரிராஜா முனீஸ்காந்த் கருடாராம் அருள்தாஸ் ஸ்ரீஜித் ரவி ஏ வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களின் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

விஜயகாந்தை போலவே அவரது மகன் சண்முக பாண்டியனும் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தொடர்ந்து அவர் வெற்றிப் படங்களில் நடித்தார் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பிடிப்பார் என்று கூறப்படுகிறது. மேலும் ஆக்சன் படங்களில் நடிக்க அவர் அதிக ஆர்வம் காட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் படை தலைவன் படவிழாவில் பேசிய இயக்குனர் ஏஆர் முருகதாஸ், சீக்கிரமாக சினிமாவில் வளர்ந்து வாருங்கள். ரமணா 2 படத்தை இணைந்து செய்வோம் என்று நடிகர் சண்முகபாண்டியனுக்கு அழைப்பும் விடுத்துள்ளார். அதனால் படை தலைவன் படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை கதையை சொல்லும் படமாக படை தலைவன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் யானை பாகன் கேரக்டரில் சண்முக பாண்டியன் நடித்திருக்கிறார். ஏற்கனவே நடிகர் சண்முக பாண்டியன் சகாப்தம் மதுரை வீரன் ஆகிய 2 படங்களில் நடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் வெளியான படை தலைவன் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. போதிய தியேட்டர்கள் கிடைக்காததால் ஏற்கனவே 2 முறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு முறையும் கேப்டன் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். ஏனெனில் இந்த படத்தில் சில காட்சிகளில் ஏஐ தொழில்நுட்பத்தில் கேப்டன் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் வருகிற 13ம் தேதி படை தலைவன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. மொத்தம் தமிழ்நாட்டில் உள்ள 500 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தமிழ்நாடு தியேட்டர் வினியாக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுரேஷ் பெற்ற நிலையில் படத்தை அவர்தான் வெளியிடுகிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் எல்கே சுதீஷ் நடிகர் சண்முக பாண்டியனின் சொந்த தாய்மாமா என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்