- Advertisement -
Homeபொழுதுபோக்குஎம்புரானை எழுதியவரின் கதையில் நடிக்கிறாரா ஆர்யா... அசத்தலாக வந்த அப்டேட்... அசுரப் பாய்ச்சலில் நடிகர்...

எம்புரானை எழுதியவரின் கதையில் நடிக்கிறாரா ஆர்யா… அசத்தலாக வந்த அப்டேட்… அசுரப் பாய்ச்சலில் நடிகர்…

- Advertisement -

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியானது சார்பட்டா பரம்பரை திரைப்படம். பா ரஞ்சித் இயக்கியிருந்த இந்த திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படாமல் நேரடியாக ஓடிடியில் வந்தது. 1980 களில் குத்துச்சண்டையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் பா ரஞ்சித்.

பசுபதி, துஷாரா விஜயன், கலையரசன் என படத்தில் நடித்த பலரும் தங்களது கேரக்டரை உணர்ந்து செயல்பட்டதால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. சொல்லப்போனால் பா ரஞ்சித்திற்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த திரைப்படம் அமைந்தது. அது மட்டுமல்லாமல் ஆர்யாவுக்கும் ஒரு மைல் கல்லாக விளங்கியது சார்பட்டா பரம்பரை.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்த வெற்றிக்காக தவித்து வருகிறார் ஆர்யா. அரண்மனை 3 திரைப்படம் அவருக்கு வெற்றியை தேடி கொடுக்கும் என பலரும் கூறியிருந்தாலும் அது வசூல் ரீதியாக ஓரளவு பேசப்பட்டதை தவிர ஆர்யாவின் நடிப்பும் அவரது இருப்பும் கொஞ்சம் கூட எடுபடவே இல்லை.

தொடர்ந்து வெளியான எனிமி, கேப்டன் ஆகிய திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்தன. அதிலும், முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடித்திருந்த காதர் பாஷா என்கிற முத்துராமலிங்கம் வந்த இடம் தெரியாமல் மறைந்து போனது. இதன் பிறகு ஆர்யாவிற்கு எந்த திரைப்படமும் ரிலீஸ் செய்யப்படவே இல்லை. இப்படியான சூழலில்தான் தற்போது மிஸ்டர் எக்ஸ் என்னும் திரைப்படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இதன் ட்ரெய்லர் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பா ரஞ்சித் இயக்கத்தில், வேட்டுவம் என்னும் திரைப்படத்திலும் ஆர்யா நடித்து வருகிறார். தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இதில் ஆர்யாவுக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்று கூறுகிறார்கள்.

இதன்பிறகே சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் ஆர்யாவின் 36-வது திரைப்படம் குறித்த அறிவிப்பு வீடியோ நாளை வெளியாகிறது. ரன் பேபி ரன் படத்தை இயக்கிய ஜியென் கிருஷ்ணா எடுக்கிறார். மலையாளத்தில் வெற்றி பெற்ற எம்புரான் படத்திற்கு கதை மற்றும் திரைக்கதை அமைத்த முரளி கோபி, ஆர்யாவின் படத்திற்கு கதை எழுதி இருக்கிறார். இப்படி ஆரம்பமே அசத்தலாக இருப்பதால் இந்த திரைப்படம் ஆர்யாவுக்கு நிச்சயம் கை கொடுக்கும் என்று சினிமா விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

சற்று முன்