கடந்த 5ம் தேதி வெளியான தக்லைஃப் படத்தை தயாரித்தவர் நடிகர் கமல்ஹாசன்தான். மணிரத்னம் இயக்கிய இந்த படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ரூ. 300 கோடி பட்ஜெட்டில் அவரே தயாரித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக நடிகர் சிம்புவுக்கு ரூ. 40 கோடி நடிகை திரிஷாவுக்கு ரூ. 12 கோடி வரை சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
படத்தின் இயக்குனர் மணிரத்னம், தயாரிப்பாளர் கமல்ஹாசன் இருவரும் சம்பளம் முடிவு செய்யாமல் பிராபர்ட்டி ஷேர் அடிப்படையில் வருகிற லாபத்தில் பங்கிட்டு கொள்வது என்ற முறையில் இந்த படத்தில் பணிசெய்திருக்கின்றனர். ஆனால் தக்லைஃப் படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கடந்த 5 நாட்களில் தக்லைஃப் படம் உலகம் முழுவதும் 46 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்திருக்கிறது. இந்திய அளவில் தக்லைஃப் படத்தின் வசூல் ரூ. 40 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த ஒரு வாரமே இந்த படத்தை தியேட்டர்களில் ஓட்ட முடியாது என்ற நிலையில் வேறு படங்களை மாற்றிக்கொள்ள தியேட்டர் உரிமையாளர்கள் தயாராகி விட்டன.
தமிழ் தெலுங்கு மலையாளம் இந்தி என 4 மொழிகளில் வெளியான தக்லைஃப் படம் கன்னட மொழி வெர்சனில் உருவாகியும் கர்நாடகாவில் வெளியிட முடியவில்லை. ஏனெனில் கன்னட மொழி குறித்து கமல் பேசியது பெரிய சர்ச்சயைானதால், கர்நாடகாவில் தக்லைஃப் கன்னட வெர்சன் வெளியாகாமல் போய்விட்டது. இதனால் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு ரூ. 20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
தக்லைஃப் படத்தை ஓடிடியில் வெளியிட டிஜிட்டல் ரைட்ஸ் வாங்கிய நெட்பிளிக்ஸ் நிறுவனமும் இப்போது கமலுக்கு நெருக்கடியை தந்துள்ளது. முதலில் போட்ட ஒப்பந்தத்தின்படி 8 வாரங்கள் கழித்துதான் தக்லைஃப் படத்தை நாங்கள் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்றால், பேசிய விலையில் 30 கோடி ரூபாயை நாங்கள் குறைத்துக்கொள்வோம். அப்படி இல்லை என்றால் 28 நாட்களில் படத்தை வெளியிட நீங்கள் சம்மதிக்க வேண்டும் என்ற நெருக்கடியை கமலுக்கு தந்துள்ளனர்.
தக்லைஃப் படத்தை ஏற்கனவே கர்நாடகாவில் வெளியிட தடை விதித்த நிலையில், ரூ. 20 கோடி இழப்பு, படம் சரியாக போகாத நிலையில் ஏற்கனவே பலத்த நஷ்டம், இதில் ஓடிடி தளமும் 30 கோடி ரூபாய் விலையை குறைக்க வேண்டும் என்று நெருக்கடி தந்துள்ளதால், 4 வாரங்களில் தக்லைஃப் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியிட கமல் அனுமதித்து விடுவார் என்றே கூறப்படுகிறது. ஆனால் தக்லைஃப் படத்தை தயாரித்து அடி மேல் அடி வாங்கும் கமலின் நிலையை பார்த்து அவரது ரசிகர்கள்தான் புலம்புகின்றனர்.





