- Advertisement -
Homeபொழுதுபோக்குஒரு காலத்தில் டீக்கடையில் உட்கார்ந்து நானும் அப்படி பேசியவன் தான்… சொசைட்டி என்பது தோட்டம் அல்ல...

ஒரு காலத்தில் டீக்கடையில் உட்கார்ந்து நானும் அப்படி பேசியவன் தான்… சொசைட்டி என்பது தோட்டம் அல்ல – நடிகர் விஜய் சேதுபதி ஓபன்டாக்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல கலைஞராக ரசிகர்கள் விரும்பும் நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. கடந்தாண்டில் வெளியான அவரது மகாராஜா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் சமீபத்தில் வெளியான அவரது ஏஸ் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. மலேசியாவில் முழுக்க முழுக்க உருவான இந்த படத்துக்கு போதிய வெற்றி கிடைக்கவில்லை.

அடுத்து விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கிய டிரெயின் படமும் அடுத்ததாக இயக்குனர் பாண்டியராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நித்யாமேனன் நடித்த தலைவன் தலைவி ஆகிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் பரோட்டா மாஸ்டராக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்.

- Advertisement -

நாயகனாக மட்டுமின்றி பல படங்களில் விஜய் சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார். குறிப்பாக மாஸ்டர் பேட்ட விக்ரம் ஜவான் போன்ற படங்களில் விஜய் சேதுபதியின் வில்லன் நடிப்பு பெரிய வரவேற்பை பெற்றது. ஆனால் இனிமேல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று விஜய் சேதுபதி அறிவித்து விட்டார். அடுத்ததாக பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, ஒரு பழமொழி இருக்கு. அரிசி கொதிக்கிற உலை வாயை மூடிடலாம். ஆனா ஊர் வாயை மூட முடியாது என்று சொல்வார்கள். எல்லா இடத்திலும் எதையாவது பேசிக்கொண்டு தான் இருப்பார்கள். இன்னிக்கு யூடியூப்பில் உட்கார்ந்து பேசிட்டு இருக்கறாங்க, தெருமுக்கில் இருக்கிற டீக்கடையில் உட்கார்ந்தும் நானும் ஒரு காலத்தில் பேசியிருக்கேன்.

- Advertisement -

அவங்க என்னை பேசறாங்களோ, இல்லே மத்தவங்களை பேசறாங்களோ அவங்களை விட அதிகமா நானும் பேசியிருக்கேன். அதெல்லாம் அறியாத வயசு. நான் யாரை எல்லாம் திட்டி இருக்கேனோ அவங்க எல்லாம் கிரேட் பர்சனாலிட்டியில் வாழ்க்கையில் ஜெயிச்சிருக்காங்க. இப்போ அந்த மெச்சூரிட்டியை வாழ்க்கையில் நான் அடைஞ்சிட்டேன்.

அதுவரைக்கும் சந்தோஷம். ஆனால் அதெல்லாம் இயல்புதான். விமர்சனங்கள் எல்லாம் சேர்ந்துதானே மனிதர்களை உருவாக்குது? சொசைட்டி என்பது ஒரு தோட்டம் அல்ல. தென்னந்தோப்போ மாந்தோப்போ அல்ல. அது ஒரு காடு. அங்கு ஒரு இலை உங்களை பாதுகாக்கும். ஒரு இலை உயிரை கொல்லும். சின்ன உயிரினமும் இருக்கும். பெரிய உயிரினமும் இருக்கும். நிறைய ஆச்சரியங்களும் இருக்கும் என்று நடிகர் விஜய் சேதுபதி அந்த நேர்காணலில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்