- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் ஹெச் வினோத்... இயக்குனரின் பட்டியலில் ஹீரோவாக இணையப் போவது அந்த பிக்...

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் ஹெச் வினோத்… இயக்குனரின் பட்டியலில் ஹீரோவாக இணையப் போவது அந்த பிக் பாஸ் பிரபலமா… நம்பவே முடியலையேப்பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ஹெச் வினோத். சதுரங்க வேட்டை என்னும் திரைப்படம் மூலம் அவர் இயக்குனராக அறிமுகமானார். தற்போது வரைக்கும் தமிழகத்தில் எங்காவது ஒரு இடத்தில் மோசடி நடைபெற்றால், அதனை சதுரங்க வேட்டை பட பாணியில் இருந்து என்றுதான் ஆரம்பிப்பார்கள்.

அந்த அளவுக்கு அந்தத் திரைப்படத்தில் பண மோசடி தொடர்பான விவரங்களை புட்டு புட்டு வைத்திருப்பார் வினோத். அதுமட்டுமல்ல சதுரங்க வேட்டையில் இடம் பெற்ற ஒவ்வொரு வசனங்களும் பலரையும் யோசிக்கும் வகையில் அமைந்தது. இப்படி முதல் திரைப்படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்ட வினோத் அடுத்ததாக கார்த்தியை வைத்து தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தை எடுத்திருந்தார்.

- Advertisement -

இங்கு எத்தனையோ காவல் துறை சம்பந்தமான திரைப்படங்கள் வந்திருந்தாலும், அதில் தீரனுக்கு என்று ஒரு தனி இடம் இருக்கத்தான் செய்யும். அந்த அளவுக்கு அந்த திரைப்படத்தை விலாவாரியாக எடுத்திருந்தார் வினோத். சொல்லப்போனால் உண்மை சம்பவத்தின் கதையை அந்த அளவு நெருக்கமாக யாரும் கூற முடியாது என்றே சொல்லலாம்.

தீரன் படத்தில், வினோத்தின் திரைக்கதை ரைட்டிங் பலருக்கும் பிடித்துப் போனது. சொல்ல வந்த விஷயத்தை இவ்வளவு சுருக்கமாகவும் சுவாரசியமாகவும் கூற முடியுமா என்று பலரும் வியக்கும் வகையில் அந்த திரைப்படத்தை வினோத் எடுத்திருந்தார். இப்படி முதல் இரண்டு திரைப்படங்கள் மூலம் உச்சம் தொட்ட இயக்குனர் அடுத்தடுத்து அஜித்துடன் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

- Advertisement -

இதில், நேர்கொண்ட பார்வை திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. வலிமை திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. துணிவு படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் சக்கை போடு போட்டது. இப்படி அஜித்துடன் மூன்று திரைப்படங்கள் கொடுத்த பிறகு, விஜயிடம் கைகோர்த்து இருக்கிறார் வினோத். அதுவும் அவரது கடைசி திரைப்படமான ஜனநாயகனை அவர் இயக்கி வருகிறார்.

இது ஒரு பக்கம் இருக்க திடீரென தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார் வினோத். மிகக் குறைந்த பட்ஜெட்டில் இந்த திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறதாம். குற்றம் கடிதம் திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த இயக்குனர் பிரம்மா இதனை எடுக்க உள்ளார். கதாநாயகனாக பிக் பாஸ் பிரபலம் ராஜு நடிக்க இருக்கிறாராம். இவர் ஏற்கனவே பன் பட்டர் ஜாம் என்னும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அது இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்