இயக்குனர் நெல்சன் தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனராக மாறியிருக்கிறார். அவர் இயக்கிய முதல் படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா கதையின் நாயகியாக நடித்திருந்தார். யோகிபாபு சரவணன் சரண்யா பொன்வண்ணன் மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் அபார வெற்றி பெற்றது.
அதன் பிறகு அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் விஜய் நடிப்பில் பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கினார். இதில் டாக்டர் படமும் பெரிய வெற்றியை பெற்றது. பீஸ்ட் படம் விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தாலும் வணிக ரீதியான வெற்றிப் படமாக அமைந்தது.
இந்த படங்களை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்கி மாபெரும் வெற்றி பெற்றார். இது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சூப்பர் கம்பேக் தருகிற ஒரு படமாக பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. அதனால் ஜெயிலர் 2 படத்தை உருவாக்க சன் பிக்சர்ஸ் தரப்பில் முடிவானது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தை நெல்சன் அடுத்ததாக டைரக்ட் செய்கிறார். 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினி கமல் இணையும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பிரமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது.
இப்போது ரஜினி கமல் இணையும் படத்தில் நடிப்பதற்காக நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அதற்கான செலக்ஷனில் நெல்சன் கவனம் செலுத்தி வருகிறார். அதில் தனது இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா மோகன் முக்கிய கேரக்டரில் நடிக்க நெல்சன் அவரை கமிட் செய்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் ரவிமோகன் நடித்த பிரதர் படங்களில் பிரியங்கா மோகன் ஏற்கனவே நடித்திருந்தார். தமிழ் சினிமாவில் சற்று இடைவெளி விட்டு தெலுங்கு படங்களில் நடித்து வந்த பிரியங்கா மோகனுக்கு மீண்டும் தனது இயக்கத்தில் தமிழில் நெல்சன் திலீப்குமார் வாய்ப்பளித்திருக்கிறார்.





