தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து கொண்டிருக்கும் அனிருத் மிகவும் பிஸியாக இருக்கிறார். அடிக்கடி வெளிநாடுகளில் மியூசிக் கான்செர்ட்களை நடத்தி வருகிறார். 34 வயதான அனிருத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. அனிருத்துக்கு எப்போது திருமணம் என பல ஆண்டுகளாக கேட்டுவரும் அவரது ரசிகர்களுக்கு விரைவில் பதில் கிடைக்கப் போகிறது.
இசையமைப்பாளர் அனிருத் இப்போது காதல் வயப்பட்டு இருப்பதாக இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் காதலிப்பது சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் என்றும் சொல்லப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் என்பதும் இதில் கூடுதல் தகவல்.
அனிருத் காவ்யா மாறன் திருமணம் குறித்து நடிகர் ரஜினிகாந்த், கலாநிதி மாறனிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டார். அனிருத்தின் மிக நெருங்கிய மாமா தான் நடிகர் ரஜினிகாந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. மிக விரைவில் அனிருத் காவ்யா மாறன் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக வலைதளங்களில் பல தகவல்கள் உலா வருகின்றன. அதில் அனிருத்தும் காவ்யா மாறனும் உண்மையில் காதலிக்கிறார்கள். இருவரும் ஜோடியாக ஓட்டல்களில் டின்னர் சாப்பிட்டு செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் இருக்கும் லாஸ் வேகாஸில் அனிருத், காவ்யா மாறனை ஜோடி சுற்றியுள்ளனர்.
கலாநிதி மாறன் அளவுக்கு அனிருத் பெரிய பணக்காரர் இல்லை; ஆனால் அனிருத்துக்கு சினிமாவில் பெயரும் புகழும் இருக்கிறது. அதனால் நிச்சயம் இந்த காதலுக்கு எதிர்ப்பு இருக்க வாய்ப்பு இல்லை. அனிருத் வீட்டிலும் காவ்யாவை மருமகளாக ஏற்றுக் கொள்ள மறுக்க மாட்டார்கள். உடனே திருமணம் செய்துகொண்டு செட்டிலாக அனிருத் தயாராக இருப்பதாகவும் காவ்யா தான் தயங்குவதாகவும் கூறுகின்றனர்.
இதுவரை தங்கள் காதல் குறித்து அனிருத், காவ்யா வெளிப்படையாக பேசவில்லை. அதனால் அவர்கள் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் வரை இது உண்மை என்று யாராலும் கூற முடியாது. மேலும் அனிருத் திருமணம் குறித்த தகவல் வெளியாவது அடிக்கடி நடக்கிறது.பாடகிகள், நடிகைகளுடன் அனிருத் திருமணம் என பலமுறை அனிருத் பெயர் அடிபட்டு இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு திருமணம் என வதந்தி பரவுவது வழக்கமாகி விட்டது. அவராகவே என்னுடைய வருங்கால மனைவி இவர்தான் என்று அறிவித்தால் மட்டுமே அது நிஜமாகும்.





