தென்னிந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் இளைய மகள் அதிதி சங்கர் கார்த்தி நடிப்பில் வெளியான “விருமன்” படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அதிதி ஷங்கர் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தார். அதோடு நடனம், பாடல் என அனைத்தையும் கற்றுள்ள அதிதி அற்புதமான ஒரு நடிகை என்பதை தனது முதல் படத்திலேயே வெளிக்காட்டி இருந்தார்.

அதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான “மாவீரன்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அதிதி சங்கர் மாவீரன் வெற்றியின் மூலமும் அனைவரது மனதையும் கவர்ந்துள்ளார். அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்து நல்ல நடிகை என்பதை அதிதி சங்கர் நிரூபித்துள்ள வேளையில் அவரது அப்பா இயக்குனர் ஷங்கர் ஸ்ரிக்ட்டான கண்டிஷனை போட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி மருத்துவ படிப்பை முடித்த அதிதி சங்கர் தனக்கு திரைப்படத்தில் நடிக்க தான் ஆசை என்று அவரது அப்பாவிடம் கேட்டுக் கொண்டதால் ஆரம்பத்தில் சங்கர் ஓரிரு படங்களில் நடிக்க அனுமதி கொடுத்துள்ளார். ஆனாலும் தனது பெயரை எங்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் உனது திறமையாளே நீ முன்னேற வேண்டும் என்று கூறியிருந்தார்.

அதன்படியே தனது வாய்ப்புகளை தேடிய அதிதி சங்கர் தற்போது அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்களை கொடுத்ததால் மேலும் சில படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார். இந்நிலையில் ஒரு சில படங்களில் நடித்தால் மட்டுமே போதும் என்று சங்கர் கூறியிருந்த வேளையில் அடுத்ததாக இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படம் நடிக்க அனுமதிப்பேன் அதன்பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அதிதி சங்கருக்கு அவரது தந்தை சங்கர் கண்டிஷன் போட்டுள்ளாராம்.
தொடர்ந்து படங்களை கமிட் செய்து வரும் அதிதி அடுத்ததாக அதர்வா தம்பி ஹீரோவாக நடிக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் ஒரு தந்தையாக தனது மகளின் வருங்காலத்தை கணக்கில் கொண்டு இரண்டு வருடம் அவகாசம் கொடுத்துள்ள சங்கர் அதன் பிறகு அதிதியின் திருமண ஏற்பாடுகளையும் செய்ய இருக்கிறார் என்று கூறப்படுகிறது.





