- Advertisement -
Homeபொழுதுபோக்குஉதவியே செய்தாலும் அதில் இவ்வளவு தாராளமா? - அந்த மனசுதான் சார் கடவுள்… மலையாள நடிகர்...

உதவியே செய்தாலும் அதில் இவ்வளவு தாராளமா? – அந்த மனசுதான் சார் கடவுள்… மலையாள நடிகர் சுரேஷ் கோபிக்கு குவியும் ரசிகர்களின் வாழ்த்துகள்!

- Advertisement -

மலையாள சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை தந்தவர் சுரேஷ் கோபி. தமிழில் அஜீத்குமாருடன் தீனா என்ற படத்திலும் விக்ரமுடன் ஐ என்ற படத்திலும் மற்றும் சரத்குமாருடன் சமஸ்தானம் உள்ளிட்ட படங்களிலும் நடிகர் சுரேஷ் கோபி முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார். அதனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் சுரேஷ் கோபி நன்கு பரிச்சயமானவர்தான். மேலும் சுரேஷ்கோபி, பாஜக அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் உள்ளார்.

மலையாளத்தில் பல படங்களில் சுரேஷ் கோபி நடித்திருந்தாலும் அவரது நடிப்பில் வெளியான கமிஷனர் படம் பெரிய அளவில் வரவேற்பை வெற்றியை பெற்ற படமாகும். இந்த படத்தில் ரதீஷ் என்ற நடிகர் மோகன் தாமஸ் கேரக்டரில் வில்லனாக நடித்திருந்தார். இவர் ஆரம்பத்தில் மலையாளத்தில் நாயகனாக நடித்து பிறகு வில்லன் கேரக்டர்களில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2002ம் ஆண்டில் நடிகர் ரதீஷ் மாரடைப்பால் இறந்துவிட்டார். இதனால் அவரது மனைவி டயானா மற்றும் 2 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள் என 5 பேரும் ஆதரவின்றி தவித்தனர். அப்போது பைனான்சியர் ஒருவர் அந்த குடும்பத்தை சிறை பிடித்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நடிகர் மோகன்லால், நேரடியாக அங்கு சென்று படத்தில் வரும் ஹீரோவை போலவே அந்த பைனான்சியர் கேட்ட பணத்தை கொடுத்து அந்த குடும்பத்தை மீட்டு வந்தார். அந்த குழந்தைகளை தனது சொந்த செலவில் படிக்க வைத்தார். நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா, அதாவது நடிகை மேனகாவின் கணவர் சுரேஷூம் அந்த குடும்பத்துக்கு உதவினார்.

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டில் ரதீஷின் மனைவி டயானா, தனது 4 பிள்ளைகளையும் தவிக்கவிட்டு விட்டு கேன்சர் நோய் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். அப்போதும் சுரேஷ்கோபி அந்த குடும்பத்தை கைவிடாமல் தொடர்ந்து பராமரித்து தேவையான உதவியை செய்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் அப்பாவும் அந்த குடும்பத்துக்கு சுரேஷ் கோபியுடன் இணைந்து உதவியிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் மறைந்த நடிகர் ரதீஷின் 2 மகள்களுக்கும் சுரேஷ் கோபி, சுரேஷ் இருவரும் முன்னின்று திருமணம் நடத்தி வைத்துள்ளனர். அதில் ஒரு மகளுக்கு துபாயை சேர்ந்த வங்கியில் பணிபுரியும் மாப்பிள்ளைக்கு 100 பவுன் நகைகள் போட்டு சுரேஷ் கோபி திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இதை பார்த்து சினிமா ரசிகர்களே அசந்து போய்விட்டனர். மறைந்த நடிகரின் நட்புக்காக இப்படி ஒரு தாராளமான மனதுடன் 100 பவுன் நகைகள் போட்டு அந்த பெண்ணின் திருமணத்தை நடத்தி இருக்கிறாரே என பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்