தமிழ் சினிமாவில் களவாணி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஓவியா. இந்த படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக, பள்ளி மாணவியாக ஓவியா நடித்திருந்தார். அதன்பிறகு கலகலப்பு படத்தில் அவர் நடித்திருந்தார். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓவியாவுக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும், ஆதரவும் கிடைத்தது. ஓவியா ஆர்மி என்று அவரது ரசிகர்கள் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக சினிமாவில் அறிமுகமான மெரினா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஓவியா தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போதும் ஓவியா சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் ஓவியாவுக்கு இதுவரை சினிமாவில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார்.
அதே நேரத்தில் சோசியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் நடிகை ஓவியா, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால் படங்களில் நடிக்காவிட்டாலும் தொடர்ந்து ரசிகர்களிடம் தொடர்பில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2 தினங்களாக ஓவியாவின் வீடியோ என்று சொல்லப்படும் அவரது அந்தரங்க வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் இருப்பது அவர் தானா அல்லது மார்பிங் செய்யப்பட்டதா என உறுதியாக தெரியவில்லை. இதுபற்றி ரசிகர்கள் பலரும் ஓவியாவின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதுகுறித்த கேள்வியை அவரிடம் கேட்டனர்.
அப்போது ஓவியா, அதுபற்றி பெரிதாக பொருட்படுத்திக் கொள்ளாமல் என்ஜாய் பண்ணி பாருங்க, அடுத்த முறை இன்னும் நீளமான வீடியோ வெளியாகும் என ஜாலியாக பதில் கூறியிருந்தார். ஆனால் அவர் அப்படி கூறியது ரசிகர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுவாக இது போன்ற பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானால், அதில் இருப்பது நான் அல்ல என்றுதான் அந்த பிரபலங்கள் கூறுவது வழக்கம்.
ஆனால் ஓவியா அதுபற்றி எதுவும் மறுப்பு தெரிவிக்காமல், ஜாலியா பாருங்க என்ஜாய் பண்ணுங்க என்று கூறியது இன்னும் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சில தகவல்கள் கிடைத்து இருக்கின்றன. அதன்படி ஓவியாவின் வீடியோவில் இருப்பது அவரது ஆண் நண்பர் தாரிக் என்பதும், இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பழகியும் வந்துள்ளனர். ஆனால் தாரிக் நடவடிக்கை ஓவியாவுக்கு பிடிக்காததால் அவரை தவிர்த்து வந்துள்ளார். அந்த கோபத்தில் தான் தாரிக் மார்பிங் செய்து இது போன்ற வீடியோவை வெளியிட்டதாக கூறப்படுகிறது. தற்போது நடிகை ஓவியா திருச்சூர் போலீசில் தாரிக் மீது புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் தாரிக் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.





