- Advertisement -
Homeபொழுதுபோக்குதெலுங்கு இயக்குநரைத் தொடர்ந்து, மலையாள பட இயக்குனருடன் கை கோர்க்கிறாரா சூர்யா... ஏற்கனவே அந்த டைரக்டர்...

தெலுங்கு இயக்குநரைத் தொடர்ந்து, மலையாள பட இயக்குனருடன் கை கோர்க்கிறாரா சூர்யா… ஏற்கனவே அந்த டைரக்டர் அப்படி ஒரு ஹிட் கொடுத்தவர் ஆச்சே… அப்படின்னா வெறித்தனம்தான் போங்க…

- Advertisement -

சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதற்கு கருப்பு என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக இது எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யா வழக்கறிஞர் மற்றும் அய்யனார் சாமி அவதாரத்தில் நடித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கதாநாயகியாக வரும் திரிஷா, வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கிறாராம்.

இதுபோக யோகி பாபு, நட்டி, லப்பர் பந்து சுவாசிகா உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள், கோயம்புத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்டன. தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டன. முதலில் ஏ ஆர் ரகுமான்தான் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து வெளியேற அவருக்கு பதில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இடம் பெற்றார். கருப்பு திரைப்படம் ஏதேனும் ஒரு பண்டிகை நாளில்தான் வெளியாகும் என்று ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இப்படியான சூழலில் தற்போது தனது 46வது திரைப்படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார் சூர்யா. ஏற்கனவே தனுசை வைத்து வாத்தி திரைப்படத்தை இயக்கியிருந்த தெலுங்கு இயக்குனர், வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவுடன் கைகோர்த்து இருக்கிறார். வெங்கியின் முந்தைய திரைப்படமான லக்கி பாஸ்கர் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

- Advertisement -

இதன் காரணமாக தற்போது சூர்யா வெங்கியின் காம்போ மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது. படத்தில் மமீதா பைஜூ கதாநாயகியாக வருவதாகவும், ராதிகா, ரவீனா உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஹைதராபாத்தில் இதன் பட பூஜைகள் நடைபெற, இயக்குனர் வெங்கியும் நடிகர் சூர்யாவும் பழனிக்குச் சென்று வேண்டினர்.

தற்போது இதன் சூட்டிங் பணிகளும் தொடங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு அடுத்தது தனது 47வது திரைப்படத்திற்காக மலையாள இயக்குனர் ஜித்து மாதவனுடன் கைகோர்க்கிறார் சூர்யா. ஜித்து மாதவன் ஏற்கனவே பகத் பாசிலை வைத்து ஆவேசம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதனால் இந்த காம்போ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதன் அறிவிப்பு, அடுத்த சில மாதங்களில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

சற்று முன்