என்னதான் வாழ்வில் புகழ் பெற்றவர்களாக, பெரிய செல்வந்தர்களாக வாழ்ந்தாலும் மனிதர்களின் வாழ்க்கையில் திருமணம் என்பது மிக அவசியமாகிறது. ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும்போதுதான் அந்த வாழ்க்கை முழுமையடைகிறது. எதிர்கால சந்ததி உருவாகவும் வாய்ப்பு ஏற்படுகிறது.
இது சாதாரண மனிதர்கள் வாழ்வில் மட்டுமின்றி, ராஜ வாழ்க்கை வாழும் மக்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும். அதனால் திருமணம் என்பது பலரது வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது. திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழ்வது என்பது பல விதங்களில் வாழ்க்கை அனுபவங்களை இழக்கச் செய்கிறது என்றால் அது மிகையல்ல.
அந்த காலத்தில் புகழ்பெற்ற நடிகைகளாக இருந்த பலரும் திருமணம் செய்துக்கொண்டனர். பெரும்பாலும் சில நடிகைகள் தவிர மற்றவர்கள் ஒரே கணவருடனும் வாழ்ந்தனர். சிலர், விவாகரத்து செய்தாலும் 2வது திருமணம், 3வது திருமணம் என்று செய்துக் கொண்டனர்.
இது நடிகைகளுக்கு மட்டுமல்ல, நடிகர்களுக்கும் பொருந்தும். உதாரணமாக காதல் மன்னன் ஜெமினி கணேசன் 4 திருமணங்கள் செய்தவர். நடிகர் கமல்ஹாசன் 2 திருமணங்கள் செய்தவர். கௌதமியுடன் லிவிங் டு ரிலேசன்ஷிப்பில் குடும்பம் நடத்தியவர். ராதிகா, நடிகர் சரத்குமாரை 3வது திருமணம் செய்தவர் என பல உதாரணங்களை சொல்லலாம்.
ஆனால் இப்போது முன்னணி பிரபல நடிகைகள் சிலர், திருமண வயது கடந்து இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றனர். இதற்கும் மிக அழகான தோற்றத்தில் இப்போதும் காணப்படும் அவர்கள், கோடிக்கணக்கில் சம்பாதித்தும் திருமண வாழ்க்கைக்கு தயாராமல் முரட்டு சிங்கிளாக இருந்து வருகின்றனர்.
முரட்டு சிங்களாக வலம் வரும் நடிகைகள் விவரம், வயதுடன் வருமாறு; அனுஷ்கா ஷெட்டி ( 43) திரிஷா (41) ஸ்ருதிஹாசன் ( 38) கிரண் ரத்தேர் ( 43), பூணம் பஜ்வா ( 39) ஆண்ட்ரியா ( 39) நக்மா ( 49) தபு ( 53) தமன்னா (34) ஆகியோரை சொல்லலாம். இதில் நடிகை கோவை சரளாவும் ஒருவர். இப்படி வயது அதிகரித்த நடிகைகள் சிலர், ஒரு கட்டத்தில் பெரிய தொழிலதிபர்கள், பணக்காரர்களுக்கு 2ம் தாரமாக, 3ம் தாரமாக தான் மனைவியாகி உள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.





